குறும்படத்தின் கதைக்களம் நாளுக்குநாள் மாறிக்கொண்டே வருகிறது. இதுதான் பேசவேண்டுமென்ற எந்தக் கட்டுப்பாட்டையும் அது உடைக்கத் தொடங்கிவிட்டது.
ஆண்பெண் உலகத்தின் சிடுக்குகளை வெவ்வேறுவிதமாக பேசித் தீர்க்க முற்படும் இந்த நவீன படைப்புவடிவத்தின் ஊடாக இன்னும் பல முயற்சிகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் அவையெல்லாம் போதுமான பக்குவத்தோடு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
சமீபத்தில் வலைதளங்களில் வெளியாகி 'தாம்பத்ய உறவு' கணவன் எனும் எல்லையை கடந்துசென்றதைப் பேசிய 'லக்ஷ்மி' குறும்படம் ஆயிரக்கணக்கான வலைவாசிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதைப்பற்றிய உரையாடல் முடிவதற்குள்ளாகவே அதன் இயக்குநர் இயக்குநர் சர்ஜூன் கே.எம். இன்னொரு குறும்படத்தோடு களம் இறங்கியுள்ளார். இக்குறும்படத்தை தமிழ் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் தயாரித்துள்ளார்.
குறும்படத்தின் களம் ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் ஒரிஜனல் வழங்கியுள்ள மா குறும்படம் ஹாக்கி டோர்னமெண்ட் விளையாட்டில் ஆர்வம் உள்ள 10ஆம் வகுப்புப் படிக்கும் பெண் அவளது வயதைத் தாண்டி நேரும் சம்பவங்களால் அலைக்கழிக்கப்படுகிறாள்.
இக்குறும்பட இயக்குநரின் முதல் படமான 'லட்சுமி' படத்தின் ஆரம்பத்தில் வருவதுபோல கொஞ்சம் ரசாபாசமான காட்சிகள் இதில் ஏதுதும் இல்லையென்பது கொஞ்சம் ஆறுதல். விளைவைப் பற்றி அறியாமல் அவள் ஒரு தவற்றைச் செய்கிறாள். ஹாக்கி விளையாட்டின் நண்பனோடு விருப்பார்வத்தோடு ஈடுபடும் பாலியல் சேர்க்கைக்குப் பிறகு 3 மாதம் கழித்துதான் குறும்படத்தின் காலம் தொடங்குகிறது.
அதனால் பிரச்சனையில்லை. மற்றபடி கர்ப்பமுற்றதை உணர்ந்தபிறகு அவள் பிரச்சனையை எதிர்கொள்ளும் நிமிடங்களே கதைக்களனாக அமைந்துள்ளதால் படம் கவனமாக ஒரு கவிதை போல காட்சிப்படுததப்பட்டுள்ளது.
இந்தமாதிரி பிரச்சனைகள் எல்லாம் ஜெயகாந்தன், பாலச்சந்தர் படங்களில் 70கள் 80களிலேயே பார்த்தாகிவிட்டது. இந்தமாதிரி பிரச்சனைகளை தனது படைப்புகளில் முன்வைத்த அத்தகைய படைப்பாளிகள் அதைக் கடந்துபோவதற்காக பின்னிய காட்சிகள் புரட்சிக் காட்சிகளாக அந்நாட்களில் பார்க்கப்பட்டன.
ஆனால் இப்படம் அவற்றிலிருந்து சற்றே மாறுபடுகிறது. அச்சிறு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட விரும்புகிறாள்.... இக்குறும்படத்தில் 15 வயது பெண்ணின் விருப்பம்தான் பிரச்சனை. விருப்பம் எந்த வயதில் வரவேண்டும் என்பதில் சமீபத்தில் பொதுவெளிகளில் உரையாடல் தொடங்கியுள்ளது. ஆனால் 15 வயதுவரை குழந்தைப் பருவம் உள்ளதாக சட்டம் சொல்கிறது. மேலும் இக்காலத்தின் உணவுப்பழக்கவழக்கத்தில் 7ஆம் வகுப்பு பெண்கூட வயதுக்கு வந்துவிடுகிறாள். எனவே அவளுடைய குழந்தைப்பருவம் இல்லையென்று எப்படி சொல்லமுடியும்?
15 வயதில் உடல் சார்ந்த விருப்பம் தவறில்லை. குழந்தைப் பெற்றுக்கொள்வது மட்டும்தான் தவறு என்று இத்திரைப்படம் சொல்கிறது.
பெண்ணின் தாய் இந்தமாதிரி மகளை அணுகும்விதம் மிகமிக புதுசு. அக்குழந்தையை அரவணைத்து வெகுசாதாரணமாக இப்பெண் குழந்தையின் தந்தைக்கு அதாவது தன் கணவனுக்குத் தெரியாமல் பிரச்சினையைக் கடந்துசொன்றுவிடக் கூடியதாக கையாளுகிறார் அத்தாய்.... பெண் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க அவளை மீண்டும் புத்துயிர்ப்பதுகூட ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் இயக்குநருக்கு நமது கேள்விகள் வேறு...
லக்ஷ்மி குறும்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிபாதி இருந்தது. படத்தையே ரிஜக்ட் செய்தவர்களும் உண்டு. அதை ஒப்பிடும்போது மா குறும்படம் வைத்திருக்கும் அடிப்படையே கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.
இப்படத்தில் மறைக்கமுடியாத நினைவுச்சின்னமாக பெண்ணுக்கு கர்ப்பம் என்ற அடையாளம் உருவாகிறது. அதை மறைக்க பெரிய உணர்ச்சிபோராட்டமும் வேண்டியிருக்கிறது இப் பெண்ணுக்கு. இதுஎதுவும் ஆணுக்கு இல்லை. ஆண் சார்ந்த குற்றவுணர்ச்சிக்கு பெரிய அளவில் வேலையில்லை, அதுசார்ந்த எந்த விவாதமும் படத்தில் இல்லை. புரிதலும்கூட இல்லை.
மா என்றால் அன்னை என்று பொருள் அதுகூட இந்தி மொழியில்... அந்த இந்தி வார்த்தையை இக்குறும்படத்திற்கு சூட்ட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பவேண்டியதில்லை. அது இயக்குநரின் ஒருவகையான தேர்வு என்றுகூட விட்டுவிடலாம்.
படத்தில் ஒரு பொறுப்புள்ள கல்லூரி புரபொசரின் வீட்டுக்குள் ஒரு முக்கியப் பிரச்சனை அவரது கண்களை மறைத்து நடப்பதாக காட்டுவது நம்பும்படியாக இல்லை.
இளம் குழந்தைகளுக்கு சாதாரணமாகவே தீயாகப் பற்றிக்கொள்ளத் தூண்டுகிறது ஊடகம் சினிமா, வலைதளங்கள் போன்றவை. அது ஆண் செய்தாலும் சரி பெண் செய்தாலும் சரி பெண்குழந்தையின் விருப்பம் என்றாலும், குழந்தைப் பருவ காமத்தைச் சொல்லும் படமாக இது அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.
இந்தமாதிரியான அசட்டுத்தனமான புதுமைப் புரட்சிகள் தேவைதானா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இதில் பங்கேற்றவர்களின் சிறந்த நடிப்பு, கேமரா, திரைக்கதை நேர்த்தி குறைத்துமிதிப்பிட்டுவிட முடியாத அளவுக்கு பொறுந்தியுள்ள இக்குறும்படம் முழுக்கமுழுக்க இயக்குநரின் சினிமா ஆர்வம் தவிர வேறெதாகவும் அதை நியாயப்படுத்த முடியவில்லை.
ஒரு முக்கியப் பிரச்சனையை அதன் தீவிரத்தின் ரணங்களுக்கான சிராய்ப்புகள் எதுவும் இன்றி அழகான திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தி பெரிய சினிமாவின் மினியேச்சராக இக்குறும்படம் அமைந்திருப்பதையும் இன்னொருவகையில் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago