பிக்பாஸ் நிகழ்ச்சியின் 22-வது நாளில் நாமினேஷன் படலம் முடிந்தபிறகு ஐஷுவிடம் மணி சந்திரா தன்னுடைய சாதி குறித்து கேட்பதாக ஒரு புது குண்டை தூக்கிப் போட்டார். முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் யாரும் வைக்காத ஒரு குற்றச்சாட்டு இது. மணி அப்படி கேட்டதை நிகழ்ச்சியில் காட்டவில்லை என்றாலும் அதுகுறித்த விளக்கத்தை அவரே பின்னர் கொடுத்தார்.
22ஆம் நாள் தொடக்கத்தில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஏற்ற ஒரு மாற்று தொழிலை புதிய தலைவர் பூர்ணிமா கூற வேண்டும் என்ற கொளுத்திப் போட்டார் பிக்பாஸ். வாரத்தின் முதல்நாளிலேயே கன்டென்ட் கிடைக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட டாஸ்க்காகவே இதனை பார்க்க முடிகிறது. விஷ்ணு - ’சிறப்பாக பாத்திரம் கழுவுபவர்’, மாயா - மந்திரவாதி, விசித்ரா - சிறப்பாக துணிமடிப்பவர், ஐஷு - கட்டிப்பிடி வைத்தியம், ஜோவிகா - டாக்டர் என யாருக்கும் பங்கம் இல்லாமல் கவனமாக பட்டங்களை வழங்கினார் பூர்ணிமா. இதனால் பிக்பாஸ் செய்த அந்த கன்டென்ட் உத்தி பெரிதாக கைகொடுக்கவில்லை. போட்டியாளர்களும் இதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.
பின்னர் இந்த சீசனின் முதல் நாமினேஷன் தொடங்கியது. முதலில் பேசிய விஷ்ணு, எதிர்பார்த்தபடியே பிரதீப்பை நாமினேட் செய்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அதற்கான காரணமாக, அவர் விசித்ராவை ஒருமையில் பேசியதையும், பிக்பாஸ் வீட்டாரை பார்த்து பிச்சை எடுத்து சாப்பிடுவதாக பேசியதையும் குறிப்பிட்டார். ஆரம்ப சில நாட்களில் விஷ்ணுவும் அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தவர்தான் என்றாலும், இந்த விஷயத்திலும் அவர் கூறியது முழுக்க நியாயமாகவே படுகிறது. ஆனால் இப்போதும் பிரதீப் தன்னுடைய தவறை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வார இறுதிகளில் கிடைக்கும் பலமான கைதட்டல்கள் அவருக்கு அபாரமான துணிச்சலை கொடு இதையடுத்து ஒவ்வொருவராக நாமினேட் செய்துமுடித்த பின் பிரதீப், நிக்சன், யுகேந்திரன், ஜோவிகா, மணி, அக்ஷயா, கூல் சுரேஷ், வினுஷா, விக்ரம், மாயா, விஷ்ணு ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் இடம்பிடித்தனர்.
மணியை நாமினேட் செய்த மாயா “மணி ஒரு பிற்போக்குவாதி” என்று வெளிப்படையாக கூறினார். நாமினேஷன் முடிந்த ஐஷுவிடன் தனியாக பேசிக் கொண்டிருந்த மாயா, ‘மணி என்னிடம் சாதி குறித்து கேட்கிறான். அது எவ்ளோ பெரிய தப்பு?” என்று குற்றம்சாட்டினார். ஆனால் மணி அப்படி கேட்டது இதற்கு முந்தைய எபிசோட்களில் ஒளிபரப்பானதுபோல தெரியவில்லையே என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சாப்பிட்டபடியே ஜோவிகாவிடம் அந்த சம்பவத்தை விவரித்தார் மணி. சிக்கன் கிரேவி மட்டும் ஊற்றிக் கொண்டு கறி சாப்பிடாத மாயாவிடம், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி, நீ அந்த சாதியா? என்று தான் கேட்டதாகவும், அதற்கு மாயா, “இப்படியெல்லாம் கேட்காதே! இது மிகவும் தவறு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும் ஜோவிகாவிடம் சொல்லிக்க் கொண்டிருந்தார் மணி.
» Bigg Boss 7 Analysis: வன்முறைக் களமான பிக்பாஸ் வீடு - ‘ஸ்டிரைக்’ கார்டு மட்டும்தான் தீர்வா?
» Bigg Boss 7 Analysis: எல்லை மீறும் கூல் சுரேஷின் உருவக் கேலி... கண்டிப்பாரா கமல்?
ஒருவர் அசைவம் சாப்பிடவில்லை என்பதற்காகவே அவரிடம் போய் நீ இன்ன சாதியா என்று கேட்பது அப்பட்டமான பிற்போக்குத்தனமன்றி வேறு என்ன? இதனை நாமினேஷனின் போது மாயா மறைமுகமாக குறிப்பிட்டதிலும் எந்த தவறும் இல்லை. தன்னை இந்த காரணத்துக்காகத்தான் மாயா அப்படி சொன்னார் என்று தெரிந்தும் கூட, ‘இவ்வளவுதான் நடந்தது’ என்று கூலாக ஜோவிகாவிடம் மணி சொல்வதன் மூலம் தான் அப்படி கேட்டது தவறு என்று கூட அவர் உணரவில்லை என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.
இதற்கிடையே நிக்சன் - ஐஷு இடையே ஒரு புதிய பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. மாயாவிடன் ஐஷு சுயநலத்துக்காக பழகுவதாக நிக்சன் கூறியது தனக்கு பிடிக்கவில்லை என்று மாயாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஐஷு. இதுகுறித்து நிக்சனிடம் பேசிய அவர், தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். இடையே துணி காயப் போடும் சாக்கில் அவர்களை நோட்டம் விட்டார். பின்னர் அவர்களுக்கிடையிலான பிரச்சினை குறித்து நிக்சனிடம் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்துவிட்ட சென்ற அவரிடம் மணி, ‘இந்த வீட்டில் ஜாலியாக ஆடு, பாடு. ஆனால் பர்சனலாக யாரிடமும் நெருங்காதே” என்று தனது பழைய பாட்டையே மீண்டும் பாடினார். இதுக்கு இல்லையா சார் ஒரு ‘எண்டு’!
முந்தைய அத்தியாயம்: வன்முறைக் களமான பிக்பாஸ் வீடு - ‘ஸ்டிரைக்’ கார்டு மட்டும்தான் தீர்வா?
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
20 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
29 days ago