நெட்டிசன் நோட்ஸ்: ஜெ. நினைவு தினம்- சந்தனப் பேழையில் சகாப்தம் அடங்கிய நாள்!

By க.சே.ரமணி பிரபா தேவி

கடந்த ஆண்டு இதே டிசம்பர் 5-ம் தேதி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நெட்டிசன்கள் பலர், #Jayalalithaa #JayalalithaaDeathAnniversary, #WeMissUAmma உள்ளிட்ட ஹேஷ்டேகுகளில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதில் #Jayalalithaa ஹேஷ்டேக் இந்திய அளவிலும் #JayalalithaaDeathAnniversary ஹேஷ்டேக் தமிழக அளவிலும் ட்விட்டரிலும் ட்ரெண்டாகி வருகிறது. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

பா. வெங்கடேசன்

'இத்தனை ஆம்பளைங்களுக்கு மத்தியில நாம நினைக்கறதை ஒரு பதிவாக்கூட எழுத முடியலை' என்று புலம்புகின்ற பெண்களுக்கு மத்தியில், இத்தனை ஆம்பளைங்களைக் கடந்து ஆட்சியைப் பிடிச்சு அரியணையில் அமர்ந்தவங்க அந்தம்மா! எப்படி அரசியல் பண்ணாங்க என்பதை விட, யார்க்கு மத்தியில் அரசியல் பண்ணாங்க என்பதே சாதனை!

Pavala Sankari

அவருடைய பல அரசியல் திட்டங்களில் முரண்பாடுகள் இருப்பினும் அவருடைய ஆளுமை என்றும் கவர்ச்சிகரமான ஒன்று என்பதில் ஐயமில்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவையும் பல நேரங்களில் நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டு அவருடைய வாழ்க்கை. இத்தகைய ஆளுமைமிக்க ஒருவர் தம் இறுதிக்கால நிலையை சரியாக நிர்மாணம் செய்யவில்லையே என்பது வேதனை.

Vidya Subramaniam

23 வயதில் தந்தையும் தாயுமற்று தனிமையிலிருந்த ஒரு இளம்பெண் அதுவும் திரை நட்சத்திரம். பாதுகாப்பாற்ற நிலை. நாலாதிசையிலும் அலைக்கழிக்கப்பட்டிருக்க வேண்டும். அறிவோ போராடும் குணமோ இல்லாதவர் அல்ல. ஆயினும் தன் மரணத்தையே மர்மமாக்கும் ஒரு கூட்டத்திடமிருந்து ஏன் இறுதி வரை அவரால் விடுபட முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது.

Jackie Sekar

யாருக்காக வாழ்ந்தோம், யாருக்காக கோடி கோடியாய் சம்பாதித்தோம் என்ற எந்த தெளிவும் இல்லாமல் மறைந்த ஒரு அரசியல் பெண்மணியின் குத்துமதிப்பான நினைவு தினம் இன்று.

Vellakovil Jagan

'மக்களால் நான் மக்களுக்காகவே நான்!'- இரும்புப் பெண்மணிக்கு இதயஞ்சலி.

Cable Sankar

மீடியா எப்படி ஒருவரைக் கட்டமைக்க விரும்புகிறதோ அப்படியே வாழ்ந்து காட்ட வேண்டிய கட்டாயத்தில். வாழ்ந்து முடிந்த பிறகு சொல்கிறோம், இரும்பு மனுஷியா இல்லை இரும்பு கேட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த மனுஷியா? #ஜெநினைவுதினம்

தேன் மொழி

பெண்கள் மிகவும் விழிப்புணர்வோடே வாழ வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் ஜெயலலிதா.

மறைந்த பின்னும் பல கோணங்களில் விமர்சனத்திற்கு உள்ளான பாவம்தான் என்ன?

மெத்த படித்த ஒரு பெண்ணால் ஏன் எதையும் "தெரிந்து" கொள்ள முடியாமல் போனது?

 உங்கள் வாழ்க்கை ஒரு பாடம்!-இந்த நினைவு நாளில் அதை வலியுறுத்துகிறேன்.

Vivek Gananathan

ஜெ மரண சர்ச்சையை ஆழமான விவாதத்திற்கு உட்படுத்தி அதன் பேசுதளத்தை விரிவாக்குவதன் மூலம் கட்டற்ற நாயக வழிபாடு, பிம்பச்சிறை தலைமை, எல்லாவற்றிற்கும் அப்பால் ஒரு தலைமை தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ஜனநாயக விரோதம் போன்றவற்றை நம்மால் விவாதிக்க முடியும். மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அப்படி கொண்டு சேர்ப்பதற்கு ஜெ. மரணம் குறித்த சர்ச்சையின் ஆழக்குழிகளை நன்கு துலக்க வேண்டும்.

Simbu prakash @simbu_prakash

வீட்டிலே ஆண் ஆதிக்கம் காட்டும் சமுதாயத்தில், நாட்டையே தன் ஆளுமை சக்தியால் ஈர்த்த ஒரே பெண் புரட்சித்தலைவி. #JayalalithaaMemorial #Jayalalithaa #JayalalithaaDeathAnniversary

VETRI VEL @VetriVe96626332

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், நான் வாழ்ந்த, வாழ்கின்ற காலத்தில் இதுபோன்ற மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு இரும்புத் தலைவியை நான் பார்க்கப்போவதில்லை.

ஶ்ரீஜெ @sriscribbles

"எதிர்ப்பு காட்டினாலும்

எதிர்த்து நிற்பது பெண் சிங்கமென பூரித்தோம்"

*

"ஆளக்கூடாது என்று தானே நினைத்தோம்

வாழக்கூடாது என ஒருபோதும் நினைத்ததில்லையே"

என எதிர்க்கட்சிகள் கூட வருந்திப் பொருமிய பெருமைக்குரிய பெண்மணி.

Aadhavan @WWESURYA

ஜெயலலிதா அமைச்சர்கள எங்க வைக்கணுமோ அங்கதான் வெச்சிருக்காங்க , நாமதான் தப்பா நெனச்சிட்டோம். #JayalalithaaDeathAnniversary

R Arivu @Arivutnj17

"மக்களால் நான் மக்களுக்காகவே நான்" - ஆண்கள் ஆளும் அரசியலில் இரும்பு மங்கையாக இருந்து அனைவரையும் ஆட்டம் காண செய்தவர்..!

Jana AK Viswasam @_iamjana

தவறுகள் நிறைந்தாலும்... இப்படி ஒரு ஆளுமையின் உச்சம் மறைந்த காரணத்தினாலே, இன்று தமிழகம் இந்திய நாட்டிலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலம் போல் இருக்கின்றது.. தன் மக்களின் தன்மானம் காத்த ஒரே தலைவி.. "ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்"

ட்விட்டர் @RavikumarMGR

கோடி கோடியாய் சொத்து சேர்த்தாராவில் தொடங்கி கடைசியில் இரண்டு இட்லியாவது சாப்பிட்டாரா என்று இறுதி வரை சஸ்பென்சாகவே இருந்து முடிந்த அத்தியாயம்! #ஜெயலலிதா

கவின்தமிழ் @kaviintamizh

இந்திய வரலாற்றிலே எப்ப இறந்தாங்கன்னு தெரியாம நினைவு தினம் அனுசரிக்கிறது இரண்டே பேருக்குதான்.. ஒருத்தர் சுபாஷ் சந்திரபோஸ் இன்னொருத்தர் நம்ம ஜெ.

நண்பனின் நண்பன் @Ravikum01678140

ஆளுமைக்கே ஆளுமையாக இருந்தவர்கூட காலனின் ஆளுமைக்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும் போல! #ஜெயலலிதா

கதிர் வளன் @NambikaiR

ஒரு நடிகைதானே என ஏளனம் பேசிய சினிமா கதாசிரியரின் ரசிகர்கள் கடைசிவரை அந்த முன்னாள் நடிகையிடம் தோற்றுப்போனார்கள்!

மாலன் நாராயணன்

பிரமிக்க வைக்கிற ஆளுமை ஜெ. காரணம் அவர் ஒரு icon of women power. சூழல்கள் ஏற்படுத்தும் தடைகளையும் வாழ்க்கை போடும் முட்டுக் கட்டைகளையும் தன்னம்பிக்கையும் மன உறுதியும் கொண்டு பெண்கள் தகர்த்து எறிய முடியும் என்பதை கண்ணெதிரே நிகழ்த்திக் காட்டியவர். பெண்கள் வலிமை பெறுவதை விரும்பும் எவரும் அவரால் ஈர்க்கவே படுவார்கள்.

அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்த நாள்களிலும் சரி, அரசியல் நுழைந்த கால கட்டத்திலும் சரி அவை ஆணாதிக்கக் கோட்டைகளாக இருந்தன. ஊடகங்கள் உட்பட, சமூக நிறுவனங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் மட்டுமல்ல, மரியாதை கூடக் கிடைக்கவில்லை. அவர் மறையும் காலத்தில் நிலைமை தலை கீழாக மாறியிருந்தது. அதற்கு அவர் மாத்திரமே காரணம் அல்ல.  ஆனால் அதை விரைவுபடுத்தியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. தமிழக  சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் உறுப்பினராக இருந்தது அவர் காலத்தில்தான். அவர் மறைவுக்கு முன் செய்த சட்டத் திருத்தங்களில் ஒன்று உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு. கல்வியில், குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கச் செய்ததன் மூலம் பல மாற்றங்களுக்குக் களம் அமைத்தவர்.

தக்கார் தகவிலார் அவரவர் எச்சத்தாற் காணப்படும். அவர் இல்லாத இந்த ஓராண்டில் தமிழகம் சந்திக்கும் சூழல்களே அவர் எப்படி ஓர் இன்றியமையாத அரணாக இருந்தார் என்பதை நமக்குச் சொல்லும்.

நான் அவள் இல்லை

"ஜெ.ஜெயலலிதா எனும் நான்" என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்திருப்பது அவமானங்கள்,சூழ்ச்சிகள், துரோகங்கள்,பெண்ணடிமைத்தனம் என அனைத்தையும் தாண்டிய உழைப்பும் தைரியமும்.

Stylish தமிழச்சி @maha_latchu

ஜே.ஜெயலலிதா என்னும் நான்...

இந்த கம்பீரக் குரலை கேட்கும் போதெல்லாம் வர்ர கூஸ்பம்ப்ஸ் இனி வேற எந்தக் குரலுக்கும் வராது... #WeMissUAmma

மருது காளை @Prahathees_anbu

சந்தனப்பேழையில் சகாப்தம் அடங்கிய நாள்- ஜெ.ஜெயலலிதா எனும் நான்.

செல்வா மனோஹரன் @talk_to_selva

தமிழக அரசியலில் கடந்த ஓராண்டாக, எதிர்க் கட்சியினராலும் கூட அதிகம் பேசப்பட்ட வாசகம்!

"ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்" - #WeMissUAmma

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

17 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்