விஜய் டி.வியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு இறுதிச்சுற்று: இன்று காலை ஒளிபரப்பாகிறது

By செய்திப்பிரிவு

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘தமிழ் பேச்சுஎங்கள் மூச்சு’. பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, சிறந்த சொற்பொழிவாளர்களைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை என பல இடங்களில் இருந்து சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திறமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் 28 போட்டியாளர்கள் மக்கள் முன் உரையாற்றி பெயர் பெற்றனர். இதன் இறுதிச்சுற்று இன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதில் அருண், பிரிட்டோ , கார்த்திக்ராஜா , ராகவேந்திரன், நாராயணன் கோவிந்தன் ஆகிய 5 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். வெல்லும் போட்டியாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். சிறப்பு விருந்தினர்களாக சுகி சிவம், சுப வீரபாண்டியன், பாடலாசிரியர் பா. விஜய், எழுத்தாளர் பவாசெல்லதுரை, கவிஞர் சல்மாஆகியோர் பங்கேற்கின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்