தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிறப்பு நிபுணர்கள் குழுவினர் தீவிர விவாதத்துக்குப் பிறகு பல ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ள பயனுள்ள ஆலோசனைகள்:
‘‘புதுசா தங்க நகை எதுவும் வாங்கினியாடி?’’
‘‘அய்யோ கண்றாவி! தங்கம் பேச்சையே எடுக்காதீங்க மாமீ. பித்த ளைக்கு கோல்டு பெயின்டு அடிச்சாமாதிரி. அதைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல. நா இப்பல்லாம் தங்க நகையே வாங்க றதில்ல மாமீ’’ என்பதுபோல தங்கத்தை கேவலப்படுத்தும் வகையிலான டயலாக்குகளை தினுசுதினுசாக எழுதி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் ராத்திரி 11 மணி வரை ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களிலும் ஒளிபரப்பலாம். இது இல்லத்தரசிகள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இல்லத் தரசர்களே மனமுவந்து கிரெடிட் கார்டை எடுத்துக்கொண்டு கிளம்பினாலும், ‘‘சேச்சே, தங்கத்தைப் போய் யாராச்சும் வாங்குவாங்களா?’’ என்று இ.த.சி.கள் ஜகா வாங்கிவிடுவார்கள்.
#தங்கம் விலையை குறைக்க வேண்டு மானால், அமெரிக்க டாலருக்கு இணை யான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த வேண்டும். அது சாமானிய வேலை அல்ல. எனவே, பகீரதப் பிரயத் தனப்பட்டு இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பை எப்படியாவது குறைக்க வழி இருக்கிறதா என்று பார்க்க லாம். அத்தகைய ஜெகஜால கில்லாடி பொருளாதார வல்லுநர்கள், மாஜி மந்திரிகள் யாராவது இருந்தால் அமெரிக்க தேர்தலில் போட்டியிடச் செய்து அங்கு நிதியமைச்சராக்கிவிட்டால் இந்த வேலை சுளுவாக முடிந்துவிடும்.
#வரதட்சணைச் சட்டம் காலாகாலமாக இருந்தாலும் ஒன்றுவிடாமல் அத்தனை கல்யாணங்களிலும் பைக், பாத்திரங் கள், நகைகள் என பரிவர்த்தனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘வரதட் சணையாக வைரம், வைடூரியம், பிளாட்டி னம் நகை கொடுத்தாலும் கொடுக்க லாமே தவிர, தங்கத்தை கொடுக் கவே கூடாது’ என்று அந்த சட்டத் தில் திருத்தம் கொண்டுவந்து விடலாம்.
#நாடு முழுக்க அனைவருக்கும் விலை யில்லா தங்க வாஷ்பேசின் வழங்கும் திட்டத்தை ‘பிரதான் மந்திரி கோல்டன் வாஷ்பேசின் குச் குச் ஹோத்தா ஹை யோஜனா’ என்ற பெயரில் தொடங்கலாம். காறிக் காறித் துப்பித் துப்பி, தங்கம் என்றாலே வெறுத்துப் போய்விடும்.
#தொலைநோக்குப் பார்வையுடன் தான் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப் படும் திட்டத்துக்கு வாஜ்பாய் போல ‘தங்க நாற்கரம்’என்று பெயர் வைக்காமல், ‘வைர நாற்கரம்’ என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது. அதுபோலவே, தங்கம் என்ற பெயர் எந்த இடத்திலும் வராமல் தடை உத்தரவு போடலாம்.
#தங்கபுஷ்பம், தங்கராசு, தங்கமணி என்று யாருக்கும் பெயர் வைக்கக் கூடாது. சினிமாவுக்கு தங்கமான ராசா, தங்கமான புருஷன் என்று தலைப்பு வைக்கக்கூடாது. குழந்தை களை ‘என் செல்லக்குட்டி’ என்று கொஞ் சலாமே தவிர, ‘என் தங்கக் குட்டி’என்று கொஞ்சவே கூடாது. போட்டிகளில் வெள்ளி, வெண்கலத்தோடு வைரப் பதக்கம் தரலாம். ஆனால், தங்கப் பதக் கம் தரவே கூடாது என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.
#பிறந்தநாள் உள்பட எதற்கும் பொன் விழா, கோல்டன் ஜூப்ளி கொண்டாட கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும். ஓல்டு ஈஸ் கோல்டு என்ற பெயரில் டிவி, எப்.எம். ரேடியோக்களில் பாட்டு போடுவதற்கு தடை விதிக்கலாம்.
#கூடை கூடையாக பீரோவில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளை குறிவைத்து கொள்ளை யடிப்பவர்கள், காத்திரமான செயினை குறிபார்த்து வழிப்பறியில் ஈடுபடுபவர் களை கவுரவப்படுத்தி பரிசளித்துப் பாராட்டலாம். அத்தகைய ‘பொற்திருடர் களில்’ கில்லாடிகளை தேர்ந்தெடுத்து ஆண்டுக்கொருமுறை ‘நற்திருடர்கள்’ என்ற விருதைக்கூட வழங்கலாம்.
இத்தகைய பரிந்துரைகளை சிறப்பு நிபுணர் குழுவினர் அளித்துள்ளனர்.
அவர்களது ஆலோசனையின் பேரி லேயே இச்செய்தியின் தலைப்பில் ‘தங்க மான யோசனைகள்’ என்பது ‘வெள்ளியான யோசனைகள்’ என்று மாற்றம் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago