திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக்குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை திரைத்துறையிலும் பொதுவெளியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Saravanan Chandran
இன்னொரு ஹைடெக் கந்துவட்டி தற்கொலைச் சாவு. அசோக் குமார் மரணத்திற்குக் காரணம் யார்? மணி ரத்னத்தின் அண்ணன் ஜீ.வியின் சாவுக்கு யார் காரணமோ அவர்தான். அவர்மேல் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் பெரும்பாலான கட்சிகளின் கருப்புப் பணத்தை அவர்தான் 'அன்பு' ஆக்கித் தருகிறார்.
Rajaji Ramachandran
இந்த கந்து வட்டி கொடுமைக்குத் தீர்வே இல்லையா? மிதமிஞ்சிய பணக்காரரா? பண ஒழிப்பு, ஜி.எஸ்.டி என்று எந்த வலைக்குள்ளும் வராதவரா? கடிவாளம் ஆளும் அரசுக்கே இல்லாத போது, கந்து வட்டிக்காரருக்கு யார் கடிவாளம் இடுவது...?
Soundar Rajan
திரைத்துறை ஒருங்கிணைய வேண்டிய நேரம்!
Chandra Thangaraj
அசோக்குமார் தைரியமானவர். அன்புச் செழியன் எத்தகைய வன்முறையை பிரயோகித்திருந்தால் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்பது நன்றாகவே புரிகிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் இம்மாதிரியான விசயங்களில் தலையிட்டு அன்புச் செழியன் மாதிரியான கந்துவட்டி கும்பலுக்கு ஒரு முடிவுகட்ட முன்வரவேண்டும்.
Antony Vasanth John Peter
அரசியல் சாக்கடைனா, சினிமா பாதாள சாக்கடையா இருக்கும் போல... ஆழ்ந்த இரங்கல்கள் அசோக் குமார்!
Nanda Periyasami
"முள்ளை பிடிச்சா கூட... முழுசா நம்பி பிடிக்கணும் ..." என நம்பிக்கை வார்த்தைகளை பதித்த சசிகுமாரின் மிகப்பெரிய நம்பிக்கை வளையம்தான் இந்த அசோக்குமார்.
கந்து வட்டியின் கொடூரமான கிளைகள் அசோக்கையும் மூச்சு முட்ட வைத்து தூக்கில் அவரை தொங்க வைத்திருக்கின்றன. எப்போதும் சிரித்துக் கொண்டே சசியின் உயரத்திற்கு காரணமான அசோக் ஏன் இப்படி நம்மை துயரத்திற்கு ஆளாகி விட்டார் ?
விஷ்வா விஸ்வநாத்
அசோக்குமார் பர்சனல் காதல் தோல்வி பிரச்சனைல தற்கொலை செஞ்சுட்டார், அவர் சாகப்போற மாதிரி மிரட்டத்தான் பிளான் பண்ணினார், ஆனா அது உண்மையா ஆயிடுச்சுன்னும் இன்னும் எட்டாம் அறிவுகள் யாரும் கிளம்பலையா?!
J Baskar
அன்புசெழியன் பெயரில்தான் அன்பு இருக்கிறதா?
Sridhar Venkatesan
''எதிலும் ஜெயிக்காத நான் எனது தற்கொலையில் தோற்கமாட்டேன் என்று நம்புகிறேன்'' என்று அசோக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல. அது பிரச்சினைக்காக அடுத்தகட்டம்தான்.
Mohan G @mohandreamer
அசோக் என்பவரின் தற்கொலையால் தமிழ் சினிமாவின் உண்மை நிலை தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. நிஜ சினிமா உலகில் வெளியே தெரியாத பல வில்லன்கள் உண்டு. படம் தயாரிக்க ஒருவர் படும் துன்பங்களை விட, அதை வெளியிட அனுபவிக்கும் துன்பங்கள் தற்கொலைக்கு ஒரு முறையாவது தூண்டும் என்பதே உண்மை.
asbin raj @asbinraj2
கேளிக்கை வரி உள்ளிட்ட பல வகைகளில் அரசுக்கு வருமானம் அளிக்கும் துறை சினிமா. சினிமாத்துறை மூலம் ஏராளமான வேலைவாய்ப்பும் உருவாகிறது.
ஆனாலும் ஏன் சினிமாக்காரர்களுக்கு வங்கிக் கடன் மறுக்கப்படுகிறது?
Surendhar MK @SurendharMK
அன்புசெழியன் விவகாரத்தில் தயாரிப்பாளர்களாக மாறியுள்ள நடிகர்களின் வெறுப்பற்ற மெளனத்தை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அன்புசெழியன்தானே சினிமாத்துறையின் முக்கிய பண விநியோகஸ்தர். #RIPAshok #AshokKumar
Soundara Raja Actor @soundar4uall
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. அது கோழைத் தனத்தையும் தாண்டி மிகப்பெரிய வேதனை. அசோக் அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்.
Viswa I விஷ்வா @sirkazhiviswa
"அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை"
நடிகர்கள், ரசிகர்களுக்கு/மக்களுக்கு தன் படங்களில் புத்தி சொல்வதற்கு முன் தன் கூடவே "இருக்கிறவங்களோட" கஷ்டத்தை போக்குவதற்கு முயற்சிக்கலாம். உயிர் அவ்வளவு மலிவா என்ன?
Priyanka @Priyankaravi20
நடிகர்கள் பல கோடிகளில் நிலையான சம்பளம் பெறுவதற்குப் பதிலாக லாபத்தில் பங்கு என்ற வகையில் சம்பளம் பெறலாமே. அப்படி நடக்கும் எனில் லாப நஷ்டக் கணக்கு ஆரோக்கியமான வகையில் இருக்கும். தரமான படங்கள் வெளியாகும். #AshokKumar #SasikumarNEXT
பா. வெங்கடேசன்
கந்துவட்டிக் கொடுமையால் சைக்கிளுக்குக்கூட வழியில்லாத இசக்கிமுத்துதான் தீக்குளித்துச் சாவான் என்பதில்லை. கார்,பங்களா என்று ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சினிமாக்காரர்களும் சாவதுண்டு.
நாமெல்லாம் அசோக் குமாருக்கு அனுதாபம் தெரிவிக்கக்கூடத் தகுதியற்றவர்கள். அசோக்குமார் போன்ற சினிமாக்காரனின் தற்கொலைகளுக்கு அன்புச்செழியன் மட்டுமே காரணமில்லை. எந்தவொரு புதுப்படம் வந்தாலும் 'தமிழ் ராக்கர்ஸ்க்கு' நன்றிசொல்லி டவுன்லோடு செய்து பார்க்கின்ற நாமும் அதிலொரு குற்றவாளிதான்.ஒருவனின் உழைப்பைத் திருடுகிறோம் என்கிற குற்றவுணர்ச்சி இன்றி அதை அனுபவிக்கின்ற ஒவ்வொருவரும் 'கந்துவட்டி' புகழ் அன்புச்செழியனுக்கு நிகரானவர்களே!
அசோக் குமார் போன்ற சினிமாக்காரன் முதலீட்டை எடுக்க முடியாமல் கடனாளியாக மூச்சை நிறுத்திக் கொண்டதில் இணையவாசிகளின் பங்கு இல்லையென்று மறுக்காதீர்கள்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
22 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago