‘தோராயம்’ கணக்கும் பின்புலமும் - ஒரு ரீவைண்ட்

By மல்லிகா

“நீங்க போக வேண்டிய இடம் இங்கேந்து எவ்வளவு தூரத்தில இருக்குங்க...? தோராயமா அரை மைல் போகணும்…”

“தோடு தோராயமா ஒண்ணரை கேரட் இருக்கும் போல இருக்கே..? ஒண்ணரை கேரட்டுக்கு அஞ்சு சென்ட் குறைச்சல்…”

“இந்த நிலம் தோராயமா இரண்டு க்ரௌண்டா..? இரண்டுக்கு நூறு சதுர அடி குறைச்சல்!”

தோராயம்...கேள்விலயோ பதில்லயோ இந்த தோராயம் பதிந்துருந்தது. இன்னிக்கு அந்த வார்த்தைக்கு நிறைய பேருக்கு அர்த்தம் தெரியாது. ரூபாய்-அணா-பைசா காலத்துல 16ஆம் வாய்ப்பாடும் 12ஆம் வாய்ப்பாடும் அத்துப்படியாக தெரிய வேண்டும்; வீசை-பலம்-தோலா காலத்துல அதுக்கேற்ற வாய்ப்பாடுகள் தெரிய வேண்டும்; மைல்-ஃபர்லாங்-அடி-இன்ச் காலத்துல வேற வாய்ப்பாடுகள் தெரிய வேண்டும்.

அந்த காலத்துல TUCS-ல மாதாந்திர சாமான் வாங்கும் போது: மெந்தியம் விலை ஒரு வீசை ‘ரூ 1-14-6’ ன்னு என்று போர்டில் போட்டிருக்கும். அம்மா போட்ட மளிகை லிஸ்ட்டுல “மெந்தியம் - அரைக்கால் வீசை”ன்னு இருக்கும் TUCS ல சாமானுக்கு bill போடறவர் மனக்கணக்குலயே அரைக்கால் வீசைக்கு விலை மனக்கணக்கு போடுவார்.

இந்த மாதிரி வியாபார விஷயங்கள் தவிர மீதி எல்லா விஷயங்களுக்குமே ‘தோராயம்’ கணக்குதான்.

We have moved into a world of unwanted precision.

சாதாரண தினசரி வாழ்க்கைக்கு தேவையில்லாத அளவுக்கு precision.

கம்ப்யூட்டர்களும் மொபைல் போனும் வருவதற்கு முன்னாடி calculatorகள் வந்து தோராயத்தை பழக்கத்திலிருந்து துரத்திவிட்டன.

முன்பு நாலு பேர் ஹோட்டலில் சாப்பிட்டு பில்லை பகிர்ந்துண்டால் தோராயமா கணக்கு போட்டு தலா பணம் குடுப்போம். இப்போ அந்த bill ஐ பகிர்ந்துக்க ஒரு மொபைல் app! இந்த app Bill ஐ நாலால் வகுத்து ஐசா-பைசா கணக்காக தலா எவ்வளவு என்று வசூல் செய்ய உதவுகிறது. தேவையா?

முன்பு காலத்தில் பத்திரிகைகளில் மேட்டூர் அணையில் இத்தனை அடி உயரம் தண்ணீர் இருக்கிறது என்று போட்டிருப்பார்கள். ஆனால் இப்போது மழை காலத்தில் மேட்டூர் அணையிலும் செம்பரம்பாக்கம் ஏரியிலும் வினாடிக்கு இத்தனை ஆயிரம் க்யூபிக் மீட்டர் தண்ணி உள்ளே/வெளியே என்று தொலைகாட்சி செய்திகளில் சொல்லுகிறார்கள். செய்தியை கேட்பவர்களும் அதை மனதில் உட்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் போனில் பேசிக்கொள்ளும் போது பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த துல்லியமான விவரம் மேட்டூர் அணையை பராமரிக்கும் இன்ஜினியர்களுக்கு அத்தாயாவஸ்யம். பாமர மக்களுக்குத் தேவையா?!

கீழ்க்கண்ட வெப்பநிலை அறிவிப்பில் Visibility 299 yards (கஜம்) என்று தெரிவிக்கறது. “நீ ஸ்கூட்டர் ஓட்டச்சே பார்த்து ஓட்டு. 300வது கஜத்தில லாரி ஏதாவது வந்தா கண்ணுக்கு தெரியாது”ன்னு எச்சரிக்க உபயோகப் படுமோ என்னமோ?! 299 கஜம் என்ற துல்லியம் தேவையா? நம்மிடம் இந்த விவரத்தை துல்லியமாக அளப்பதற்கு ஒரு சாதனம் இருப்பதால் செய்கிறோமா?

அந்த காலத்தில் குழந்தைகள் சௌக்யமா என்று கேட்டால் ‘பார்க்க நல்ல வளர்ச்சியாக இருக்கு’ என்று பதில் சொல்லுவார்கள். இந்த காலத்தில் ‘Pediatrician குழந்தையை செக் பண்ணினார், எடை 84th percentile ல இருக்கு, உயரம் 68th percentile ல இருக்கு’ என்று பதில் சொல்லுகிறார்கள். Percentile க்கும் Percentage க்கும் என்ன வித்தியாசம்னு டாக்டருக்கே தெரியுமோ?

அதே மாதிரி தன் குடும்ப நபர்களின் நஷத்திரம் தெரியுமோ இல்லையோ blood pressure, sugar விவரங்கள் அத்துப்படி. அவரவர்கள் சாப்பிடும் மருந்துகளின் வீர்யம் எல்லாம் துல்லியமாக தெரியும். இன்னிக்கு எவ்வளவு steps நடந்தோம் என்பதை ஒரு app சொல்லுவதால் சாதாரணமாக பேச்சில் “போன வாரம் ஒரு நாளுக்கு 4,740 steps நடந்தேன். இந்த வாரம் 4,450 steps தான் நடக்க முடிஞ்சுது” என்றெல்லாம்!

அந்த காலத்தில் அம்மாக்களிடம் சமையல் குறிப்புகள் கேட்டால் தோராயமாக இவ்வளவு கைப்பிடி, சிட்டிகை, விரல் கட்டை நீளம், எலுமிச்சம் பழம் அளவு என்றெல்லாம் கண் திட்டம் சொல்லுவார்கள். இப்போது இன்டர்நெட் சமையல் குறிப்புகளில் கிராம், மில்லி, டீ ஸ்பூன், டேபிள் ஸ்பூன் என்று போடுகிறார்கள்.

அன்று டி. வி. யில் கிரிகெட் மேட்ச் பார்த்துக் கொண்டுருந்தேன். பல பேட்ஸ்மேன்களின் batting average ஒத்துப் பார்த்து காட்டினார்கள். இவர் ஒரு இன்னிங்ஸுக்கு சராசரி 35.22 ரன், இன்னொறுவர் சராசரி 35.23 என்றெல்லாம். இந்த 0.01 கூட அடித்திருப்பதால் இரண்டாவது பேட்ஸ்மேன் அதிகமாக சாதித்து விட்டதாக எனக்கு தெரியவில்லை. தோராயமாக இரண்டு பேட்ஸ்மேனும் ஒரே தரம் என்றுதான் என் எண்ணம். எனக்கு ஏனோ புள்ளிக்கு அப்பால் உள்ள எண்கள் மனதில் பதிவதில்லை.

அதே போல bowling speed, bowler வீசிய பந்துகள் எவ்வளவு good length பந்துகள், பேட்ஸ்மேன் அடித்த six எவ்வளவு மீட்டர்கள் பறந்து போய் வெளியில் விழுந்தது என்றெல்லாம் புள்ளி விவரம்! வெகு தூரம் பறந்தது எனபதற்காக ஆறு ரன்களுக்கு மேல் தரப்போவதுல்லையே?

முன் காலத்தில் “அடுத்த பஸ் எப்போ சார் வரும்?” என்று கேட்டால் “சுமாரா கால் மணி ஆகும்” என்று பதில் சொல்வார்கள். இப்போது எல்லார் கையிலும் இருக்கும் மொபைலில் வினாடி சுத்தமாக டயம் தெரிவதால் “டயத்துக்கு வந்தான்னா அடுத்த பஸ் பதிமூணு நிமிஷத்தில் வரணும்”னு என்னமோ சந்திர மண்டலம் போகற ராக்கெட் launch டயம் மாதிரி!

ஒரு பெரிய கர்நாடக சங்கீத பாகவதரைச் சந்தித்தேன். “உங்களுடைய ஆரம்ப காலத்திலிருந்து இப்போது என்ன பெரிய மாற்றம்” என்று கேட்டேன். அவர் “ஆரம்ப காலத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் சென்று ஒரு மாதம் தங்கி பத்து கச்சேரிகள் பாடினால் ஒரு கச்சேரிக்கு நூறு பேர் வருவார்கள், ஒரு மாதத்தில் தோராயமாக ஆயிரம் பேர் என் சங்கீதத்தை கேட்டிருப்பார்கள். கச்சேரிக்கு வந்த ரசிகர்களின் சங்கீத ஞானம் எந்த வரைக்கும் என்று எனக்கு அப்பட்டமாகத் தெரியும்.

இன்று YouTube-ல் என்னோட ஒவ்வொரு பாட்டையும் எவ்வளவு பேர் இதுவரை பார்த்தார்கள் ‘VIEWS’, எவ்வளவு பேர் ‘Like’ பண்ணினார்கள் என்ற புள்ளிவிவரம் தெரிகிறது. ஆனால் கேட்டவர்களின் சங்கீத ரசனைத் திறமை என்ன என்று தெரிவதில்லை” என்றார்.

இதே சமயத்தில் அத்தியாவஸ்யமான அளவுகள் எதுவோ அதற்கான அளவு சாதனம் இதுவரை இல்லை. கார்களில் இன்னும் எவ்வளவு பெட்ரோல் இருக்கிறது என்று ஒரு gauge காட்டுகிறது. மொபைல் போனில் இன்னும் எவ்வளவு battery charge இருக்கிறது என்று காட்டுகிறது. ஆனால் Gas cylinder ல் இன்னும் எவ்வளவு gas இருக்கிறது என்று காட்ட சாதனம் இல்லை. சமையல் செய்பவர்கள் gas cylinder-ஐ ஏதா ஒரு கரண்டியல் கடம் வாசிப்பவர போல் தட்டி அந்த சத்தத்தை வைத்து இன்னும் தோராயமாக மூன்று நாட்கள் சமைக்க முடியும் என்று கணக்கு போடுகிறார்கள். இதை துல்லியமாக காட்ட ஒரு சாதனம் இல்லையே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்