திண்ணை: ஹெமிங்வேயின் நாவல் திரைப்படம்

By செய்திப்பிரிவு

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ தமிழிலும் புகழ்பெற்ற நாவல். இவரது பல கதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கடைசி நாவல், ‘Across the River and Into the Trees’. இந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு, அதே பெயரில் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஸ்பானிய இயக்குநர் பவுலா ஓர்டிஸ் இயக்கியுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இத்தாலியில் ஒரு ராணுவ அதிகாரியைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. 50 வயது ஆணான அவருக்கு 18 வயதுப் பெண்ணுடன் ஏற்பட்ட ஈர்ப்பைப் பற்றி நாவல் பேசுகிறது.

வாசிப்பு இயக்கப் புத்தகக் காட்சி

தமிழ்ப் புத்தகாலய வாசிப்பு இயக்கம் சார்பில், புத்தகக் காட்சி கடந்த மே 22 முதல் பல்வேறு இடங்களில் நடந்துவருகிறது. செங்குன்றம், மொண்டியம்மன் நகர், சில்ரன் பேரடைஸ் பள்ளியில் ஜூன் 4ஆம் தேதி வரையும் ராணிப்பேட்டை பெல் ஊரக மனமகிழ் மன்றத்தில் ஜூன் 11ஆம் தேதி வரையிலும், பெருங்குடி வள்ளலார் சன்மார்க்க அரங்கில் ஜூன் 6இல் தொடங்கி 20ஆம் தேதி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. மேலதிகத் தொடர்புக்கு: 044 24332424.

சுந்தர ராமசாமிக்கு ஓர் இணையதளம்

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 92ஆவது பிறந்தநாளை ஒட்டி (மே 30) அவருக்காகப் புதிய இணையதளத்தைக் (https://www.sundararamaswamy.in) காலச்சுவடு தொடங்கியுள்ளது. சுந்தர ராமசாமியின் காணொளிகளும் ஒளிப்படங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

அவர் நிகழ்த்திய உரைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. க.நா.சுப்ரமண்யன், அசோகமித்திரன் உள்பட எழுத்தாளர்களுக்கு சுரா எழுதிய கடிதங்கள் காலத்தைப் புரட்டிக் காட்டுகின்றன. சுரா குறித்து மலையாள எழுத்தாளர்கள் ஆற்றூர் ரவிவர்மா, பால் சக்கரியா உள்ளிட்டோர் எழுதிய மதிப்பீடுகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுரா குறித்த முழுமையான ஆவணக் களஞ்சியமாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொங்கணி எழுத்தாளருக்கு ஞானபீடம்

இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஞானபீட விருது (2022) கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மௌசோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘கார்மெலின்’ நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர் இவர். இவரது பல நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் இதுவரை எழுத்தாளர்கள் அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இருவருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

16 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்