மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், சூர்யன், குரு, ராகு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். கணவன் - மனைவி, குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள், அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் இருக்கும். தந்தைவழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவயான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இதுவரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்க்கிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். தொழிலதிபர்கள் ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பை பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். தொழில் மேன்மைக்காக நிறுவன இட விஸ்தரிப்பு, புதிய கிளை துவக்கம் போன்ற நற்பலன்களைப் பெறுவார்கள்.
» கும்பகோணம் | நாகரசம்பேட்டை அழகு நாச்சியம்மன் கோயிலில் துாக்கு தேர் திருவிழா
» கள்ளழகர் அழகர்மலையை சென்றடைந்தார் - 21 பூசணிக்காய் சுற்றி திருஷ்டிக்கழிப்பு
பெண்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். மாணவர்கள் தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். சனிக்கிழமைதோறும் முருகனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைத்தாலும், வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல்ல உதவிகளும் கிடைக்கபெறும். புகைப்பிடித்தல் மதுகுடித்தல் போன்ற நச்சுத்தன்மை பொருந்தியவற்றை உபயோகப்படுத்துதல் கூடாது. தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் செயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
உத்தியோகஸ்தர்கள் துறைசார்ந்த பணியாளர்களிடம் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். வியாபாரிகள் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். இருப்பினும் உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டி வரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான பொருளாதாரம் கிடைக்கப்பெற்று தகுதியான செலவுகளை செய்து நற்பெயர் பெறுவீர்கள்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருக்கும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பலன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள்.
பெண்கள் நிறைவான வகையில் சந்தான பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த பொருட்களை உருவாக்கும் பெண்கள் நிறைவான வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம்காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர். மாணவர்கள் தகுந்த சமயத்தில் நுணுக்கங்களை அறிந்து நற்பெயர் அடைவார்கள். நண்பர்களும் உதவி செய்வார்கள்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும்.
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும். பூமி தொடர்பான விற்பனை தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்கள் சுமாரான அளவில் லாபம் பெறுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அரசுத்துறைகளில் அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் சிலரது குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாவார்கள். பின்னர் வரும் காலங்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள். தொழில்திபர்கள் தங்கள் நிறுவனத்தின் புகழை பரப்ப புதிய விளம்பரமும், வியாபாரம் தொடர்பான வாகனங்கள் வைத்திருப்பாவர்கள், வாகன பராமரிப்புக்காக செலவும் செய்ய வேண்டியது இருக்கும்.
பெண்களுக்கு பணிச்சுமைகள் காரணமான மனக்குழப்பமும் தூக்கமின்மையும் உண்டாகி பின்னர் சரியாகும். புத்திரபாக்கிய அமைப்பு அனுகூல நிலையில் உள்ளது. மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று எழுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்பப்படும். ஆன்மீக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத்தரும். வீடு, மனை, வாகன வகைகள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்செய்யவும் நல்வாய்ப்புகள் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியின் பொருட்டு பல்வேறு இடங்களுக்கு சென்றுவர நேரலாம். மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையிலான பலன்கள் நடக்கும். உங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட தயக்கம் காட்டிய ஊழியர்கள் கூட உங்கள் சொல்லை மதித்து நடக்கும் நிலைகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். லாப விகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதனத்தை தொழிலில் போடுவார்கள். சொகுசான ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து மேன்மை பெறுவார்கள்.
பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான சலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதால் உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு உதவிக்காரமான இருக்கும். மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும். நண்பர்களுடன் உரையாடுவதால் புதிய ஞானம் பிறக்கும். தெய்வ நம்பிக்கை பெருகுவதால் மனம் அமைதியாக இருக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். பிரதோஷம்தோறும் அபிஷேகத்திற்கு நெய் மற்றும் தேன் கொடுக்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் கடந்த காலங்களில் இருந்த வீண் செலவுகள் குறைந்து சுபகாரிய செலவுகள் நிகழும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார்துறைகளில் உள்ளவர்களுக்கு பல்வேறு விரயமான செலவுகள் வரலாம். அனைவரையும் அரவணைத்து வேலை வாங்கும் புதிய சிந்தனைகள் உருவாகும். புதிய செயல்திறன் பெற்று நிர்வாகத்திடமும் ஊழியர்களிடமும் நற்பெயர் பெறுவார்கள்.
வியாபாரிகள் எந்த வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அறச்செயல்கள் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். நற்பெயரும் நற்புகழும் பெறுவீர்கள். வீடு மனை வாகன யோகங்கள் சுமாரான பலனைத்தரும். கடன் மற்றும் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் வெற்றிபெறும்.
பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள். அரசு மற்றும் தனியார் துறைகளிளல் பணியாற்றும் பெண்கள் புதிய உத்வேத்துடன் செயல்பட்டு மனநிறைவு பெறுவார்கள். மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் தெய்வ வழிபாடு நல்வழிப்படுத்தும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும். புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும். நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழை தக்க வைக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும்.
தனியார்துறை ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு தகுந்த பொருளாதாரம் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய் கிடைத்த பொருளாதாரம் சுபமங்களச் செலவுகளை உருவாக்கித்தரும்.
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு. சமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் தகுந்த புகழ் கிடைக்கும். அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கிடும் யோகபலன்கள் உண்டாகும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகள் ஏற்பட்டு மனநிறைவைத் தரும்.
பரிகாரம்: குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் பச்சரிசி சாதம், வெல்லம், எள், நல்லெண்ணெய் கலந்து காக்கைக்கு வைக்கவும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும்.
திருமணவானவர்களுக்கு புத்திர பாக்கிய அனுகூலம் உண்டு. கடன், வழக்கு, எதிரி ஆகிய வகைகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் சமரச பேச்சுகளால் சுமூக நிலைக்கு வரும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஆலோசனைகள் வழங்கி குடும்பத்தை நல்ல முன்னேற்றமான நிலைக்கு கொண்டு வருவர். தந்தை வழி உறவினர்கள் அளவான முறையில் உறவு வைத்துக் கொள்வார்கள்.
செய்தொழிலில் முன்னேற்றமும் ஆதாயமும் கண்கூடாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த செயல்நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு சுற்றுலா துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் தனியார் சுற்றுலா நிறுவன அதிகாரிகளும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து பொருளாதார நிலை உயரப்பெறுவர்.
தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவர். வியாபாரத்திற்கு புதிய வாகனம் வாங்குவீர்கள். பொதுவாக அனைத்து தொழிலதிபர்களும் நல்லநிலைக்கு வருவர்.
பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே பலன்கள் இருக்கும். வேலையில் இடர்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் சிறப்பான பலனைக் காணலாம். இந்தக் கல்வியாண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும்.
பரிகாரம்: அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடவும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ள நபர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளால் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும்.
உத்தியோகஸ்தர்கள் வருமான வரித்துறை, சுங்க இலாகா தணிக்கைத்துறை ஆகியவற்றில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு தன் துறை சார்ந்த ஊழியர்கள் ஒத்துழைப்பு குறைவினால் இடம்மாற்றம் அல்லது துறைசார்ந்த அதிகாரிகளின் நெருக்குதல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி புதிய அனுபவ பாடங்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலையை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும்.
பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். ஓவியப் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தி பெயரும் புகழும் பெறுவார்கள். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும்.
பரிகாரம்: சிவன் கோவிலை வலம் வரவும். சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். ஊற வைத்த நாட்டுக்கொண்டைக்கடலையை (மூக்குகடலை) உங்கள் கையால் கோர்த்து குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் |15-05-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். மனைவி வகை உறவினர்கள் உங்கள் உதவிகளை நாடி வரவும் மார்க்கம் உண்டு. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமையில் இணக்கமான சூழ்நிலை உண்டு. தந்தையின் ஆதரவுடன் புதிய தொழில்கள் துவங்கி செயல்படுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் இனி இருக்காது. தொழிலதிபர்கள் கடந்த காலங்களில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர். பால்பண்ணை அதிபர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள். கலை அழகு மிக்க பொருட்களை உற்பத்தி செய்வோர் லாபம் பெறுவர். மனிதாபிமான செயல்கள் அதிகம் செய்வதால் சமூசத்தில் அந்தஸ்தும் புகழும் ஏற்பட்டு கவுரவமான பதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு, நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத் துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். மாணவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர். தந்தை மகன் உறவுமுறைகள் சமச்சீராய் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.
பரிகாரம்: அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. அந்நிலை அடியோடு அழிந்து விட்டது. மேலும் நோய்களுக்கான சிகிக்சைக்கோ வீணான செயல்களுக்கோ கிரகநிலை இடம் தராது. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உங்களின் பணத் தேவைகளுக்கு வாழ்க்கைத்துணையின் உதவி நிச்சயம் உண்டு.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். சக ஊழியர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள். தொழிலதிபர்கள் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள் பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும்.
பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயரதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல்தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் உள்ளோர் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய துறைகளில் எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
பரிகாரம்: சிவன் கோவிலை வலம் வரவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சொல்லால் மகத்துவமும் செயலால் புகழ் கீர்த்தி ஆகியனவும் ஏற்படும். வீடு மனை வாகனம் ஆகிய இனங்களில் மராமத்து பணிகள் நடைபெறும். சம்பாதித்த பணத்தை பாதுகாக்க சேமித்து வைக்க நல்வழிகள் உண்டாகும். வெளியூர் பிரயாணங்கள் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் சென்று வரும் வகையினர் தகுந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூரதேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். இந்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.
பரிகாரம்: ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். முன்னோர்களையும், குல தெய்வத்தையும் தினமும் வணங்கவும்.
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago