கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். மனோதிடத்தை தரும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
» குரு பெயர்ச்சி 2023 - 2024 | குரு பார்வையின் பலன்களும் பாக்கியமும் - ஒரு விளக்கம்
» குரு பெயர்ச்சி 2023 - 24 | கடகம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்
கணவன், மனைவிக்கிடையே பந்தபாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.
பரிகாரம்: பூஜை செய்து சந்திரனை வணங்கி தயிர் சாதத்தை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய குழப்பங்கள் நீங்கி மனதெளிவு உண்டா கும். பொருள் சேர்க்கை இருக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும் சாதகமான பலன்கள் இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை வணங்கி கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருளை நைவேதியம் செய்து ஏழைகளுக்கு வழங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்து முடியும். இதுவரை இருந்த அலைச்சல்களும் குறையும். செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் வரவும் இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும்.
குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டிவரும். எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினை குறையும்.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஏப்.27 - மே 3
> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago