துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், குரு - களத்திர ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சகபணியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
பெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.
» துலாம் ராசியினருக்கான ஏப்ரல் மாத பலன்கள் - முழுமையாக | 2023
» விருச்சிகம் ராசியினருக்கான ஏப்ரல் மாத பலன்கள் - முழுமையாக | 2023
பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் புத்திக்கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.
பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்.
பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மனம் தடுமாறாமல் இல்லாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு மனத்தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவனச் சிதறல் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி | இந்த வாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago