மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும்.
அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.
» மகரம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
» கும்பம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
பரிகாரம்: சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலை பளு குறையும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் குரு, சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் சுபச்செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மனசங்கடம் ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: விநாயக பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபட எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் குரு, சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும்.
கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ மார்ச் 23-29
> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago