மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் புதன், சூரியன் - விரைய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - என கிரகநிலை இருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் வீடு, மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். அதே வேளையில் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் முற்றும் முழுவதுமாக நீங்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும் அகலும்.
தொழிலதிபர்களுக்கு தொழிலில் நல்ல ஏற்றம் காணப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். வியாபாரத்தில் இருந்து வந்த தொய்வுநிலை மாறி சீரான வேகம் பிடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், எதிர்பார்த்த பணியிடமாற்றம், பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும்.
வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய சிறப்பான வேலை அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
» ‘செவ்வாய் தோஷம் பார்க்காதீங்க!’ - புதிய ஜோதிட முறையில் விளக்கம்
» மேஷம் ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023
பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ச்சனை செய்து வழிபடவும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், சூரியன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதர்கள், நண்பர்கள் ஆகியோருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். வாழ்க்கைத்துணையுடன் தேவையில்லாமல் கருத்து மோதல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் அந்த விஷயத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது உங்களுக்கு நன்மையைத் தரும்.
தந்தையார், தந்தையார் வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் தீரும். முன்னோர்களின் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேர வேண்டிய காலம் கணிந்து விட்டது என்று சொல்லலாம். தொழிலதிபர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். உப தொழில் ஆரம்பிப்பதற்கான சூழிநிலை ஏற்படும். தேக்க நிலை அடியோடு மாறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணியிடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல வேண்டி வரலாம். மாணவர்களைப் பொறுத்த வரை இந்த காலகட்டத்தில் வெளிநாடு சென்று படிப்பதற்கான சூழ்நிலை காணப்படும். மேற்படிப்பு படிப்பதற்கான இருந்து வந்த தடைகள் நீங்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து வலம் வரவும்.
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூரியன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.
பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் பல முறை யோசித்துச் செயல்படுவது நன்மை தரும். பணம் சார்ந்த பிரச்ச்சினைகள் முற்றிலும் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.
பரிகாரம்: முருகனுக்கு விரதம் இருந்து வணங்க பிரச்சினைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும். இந்தவாரம் கிரகங்களின் நிலை:
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ பிப்.23 - மார்ச் 1 வரை
> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago