துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி, சூரியன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்: 13-02-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சந்தோஷம் அதிகரிக்கும். பல வகையான யோக பலன்களைப் பெற முடியும். சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
» துலாம் ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023
» விருச்சிகம் ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023
பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய யுக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.
பரிகாரம்: சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி, சூரியன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்: 13-02-2023 அன்று சூரிய பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தாமதங்கள் அகலும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். அலுவலகத்தில் எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள்.
பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, சூரியன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்: 13-02-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும்.
பெண்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். அரசியல்வாதிகள் ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.
பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும். இந்தவாரம் கிரகங்களின் நிலை:
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ பிப்.9-15 வரை
> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago