துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.5 -11

By செய்திப்பிரிவு

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். எந்த விஷயத்தையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். குடும்பத்தில் எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை.

பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி | பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

விருச்சிகம்: (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி | பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன்(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும்.

பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி | பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். இந்த வாரம் கிரகங்களின் நிலை:

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.5 -11

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்