துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும்.
பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
» 108 வைணவ திவ்ய தேச உலா - 95 | திருக்குளந்தை வேங்கட வாணன் கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 94 | தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸர், அரவிந்தலோசனர் கோயில்கள்
பரிகாரம்: ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
***********
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் சூரியன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.
பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
***********
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - லாப ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.
தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.22 - 28
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago