துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை - ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சொத்துக்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனாலும் வீண்பழி உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
» துலாம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் - முழுமையாக | 2022
» விருச்சிகம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் - முழுமையாக | 2022
பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு மஞ்சள் வஸ்திரம் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
***********
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன், சுக்ரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் புதிய நபர்களின் நட்பை ஏற்படுத்தும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சினையை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது.
கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: மரிக்கொழுந்தை அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
***********
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.
நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: சிவன் கோவிலை தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.17-23
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago