கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.10 - 16 

By செய்திப்பிரிவு

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - சப்தம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: 13-11-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: திருப்தி அளிக்கும் வாரம். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். அரசியல்வாதிகளுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.

***********

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது - சுகஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: 13-11-2022 அன்று சுக்ர பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் வாரம். தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆடம்பர செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.

***********

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: 13-11-2022 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும் வாரம். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். குடும்பத்தினரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். மாணவர்களுக்கு நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.10-16

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்