துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். ராசியாதிபதி சுக்ரன் ராசியிலேயே குருவுடன் சஞ்சாரம் செய்வதால் விஷேஷங்கள் இனிதே நடக்கும்.
தொழிலில் வார்த்தைகளில் கவனம் அவசியம். செய்ய முடிந்தவைகளுக்கு மட்டும் வாக்கு கொடுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படலாம். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரலாம். சிறிது காலத்திற்கு ஒத்தி வைத்து தீர ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும்.பெண்களுக்கு பணப்பிரச்சினைகள் தீரும்.
» திருமலையில் நித்ய கல்யாணம்... பச்சை தோரணம்... - ஏழுமலையானுக்கு 365 நாட்களில் 470 விழாக்கள்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 12.கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
கலைத்துறையினருக்கு ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். நீங்கள் பாடங்களைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.
ஸ்வாதி: புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பரிகாரம்: அம்பாளுக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
***********
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் குடும்ப பிரச்சினை தீரும். சுபச்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொருவராக அவரவர் தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.
உத்யோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக சம்பளம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் நிம்மதி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மாணவர்களுக்கு அனுகூலமான வாரம். உதவித் தொகை கிடைக்கும். பெரியவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு தேவையானதை வாங்கித் தருவார்கள்.
விசாகம் 4ம் பாதம்: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர்.
அனுஷம்: பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும்.
கேட்டை: உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.
பரிகாரம்: நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
***********
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் தொழிலில் அபரிவிதமான வெற்றிகளை எதிர்பார்க்கலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகள் லாபம் தரும் வகையிலேயே இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். சம்பள உயர்வு கிடைக்கும். பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். சொத்துகள் வாங்க முடிவு செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
குடும்பஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் கேது பகவான் சேர்க்கை சில தொந்தரவுகளை கொடுத்தாலும் ராசிநாதன் சஞ்சாரம் அனுகூலத்தைக் கொடுக்கும். நீங்கள் சொல்ல விரும்புவதை தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த மனசங்கடங்கள் குறையும்.
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் - ஆசிரியர் உறவு சுமூகமாக இருக்கும். இதனால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பொறுமை காப்பதன் மூலம் சில நல்ல பலன்களையும் பெறுவீர்கள்.
மூலம்: வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.
பூராடம்: வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.22- 28 வரை
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago