கடகம் கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: தைரிய ஸ்தானம் பலமாக இருப்பதால் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம்.
» 108 வைணவ திவ்ய தேச உலா - 4.திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 3. உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில்
பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினருக்கு துணிச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சுபச்செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.
புனர்பூசம் - 4 பாதம்: எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதை நிதானமாக செய்து வெற்றி பெறுவீர்கள்.
பூசம்: எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
ஆயில்யம்: எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுப்பீர்கள்.
பரிகாரம்: திங்கள்கிழமை அன்று அம்பாளை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
***********
சிம்மம் கிரகநிலை - ராசியில் புதன், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் சூரியனால் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். ராசிநாதன் சூரியன் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும்.உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
மகம்: தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட முடியும்.
பூரம்: பொறுமையுடன் செயல்பட்டால் காரியங்கள் நடந்து முடியும்.
உத்திரம் - 1ம் பாதம்: பணப்பற்றாக்குறை நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.
***********
கன்னி கிரகநிலை - ராசியில் சூரியன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ) - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இம்மாதம் 25ம் தேதி - சுக்கிரன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
பலன்: ராசிக்கு வரும் சுக்கிரனால் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்று தரும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். குடும்பத்தில் கோபத்தை விட்டு விட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தாங்கள் எதிர்பார்க்கும் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.
உத்திரம் -2, 3 ,4 பாதங்கள்: தடைகள் விலகும். எதிலும் லாபம் கிடைக்கும்.
ஹஸ்தம்: வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: பணவிஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.
பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.22- 28 வரை
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
29 mins ago
ஜோதிடம்
39 mins ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago