துலாம் கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 17ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இந்தமாதம் 17ம் தேதி - சூர்யன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: ராசியில் கேது இருந்தாலும் ராசிநாதன் சுக்கிரன் சுயசாரத்தால் வெளியூர் பயணங்களும் அதன் மூலம் லாபமும் கிடைக்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சென்ற வாரத்தை விட இந்த வாரம் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய நிறுவனங்களின் பங்களிப்பு இருப்பதால் வியாபாரம் பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகும்.
» “எந்த நோக்கத்திற்காக தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதோ, அதை நிச்சயம் அடைவோம்” - பிரேமலதா நம்பிக்கை
வெளியூர் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். சிக்கல்கள் பிறரால் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடும் தைரியம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கு யோகம் உண்டாகும். குடும்ப செலவுகளில் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குடும்ப பொறுப்புகளின் காரணமாக கடின உழைப்பு ஏற்படக் கூடும்.
பெண்களுக்கு உயர்வான வாரம் என்றே சொல்ல வேண்டும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரலாம். கலைத்துறையினர் வெளியூர் செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு உடன் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மாணவ மணிகள் விளையாட்டுகள், போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களைப் பெறுவீர்கள்.
சித்திரை - 3, 4 பாதங்கள்: எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும்.
ஸ்வாதி: மன தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும்.
விசாகம் - 1, 2, 3 பாதங்கள்: ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட மனதில் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.
***********
விருச்சிகம் கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 17ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இந்தமாதம் 17ம் தேதி - சூர்யன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: ராசிநாதன் செவ்வாய் மிகவும் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். பலவித யோகங்கள் ஏற்படும். ராசியை குருபகவான் பார்ப்பதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பங்குதாரர்களிடமிருந்து மனக்கசப்பு நீங்கி தொழிலை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகலாம். மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியில் சிக்கி தவிப்பீர்கள். சக வேலையாட்களால் பிரச்சினை ஏற்பட்டால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்வது உங்களை பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும். குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இருப்பதால் தேவையான அனைத்து வசதிகலும் தானாகவே வந்து சேரும்.
வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவீர்களேயானால் அதில் வெற்றி நிச்சயம். பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் அதை திறம்படச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தேக்க நிலை மாறூம். அரசியல்வாதிகளுக்கு தேவையான பண உதவி கிடைக்கும். மாணவ மணிகளுக்கு சந்தோஷமான வாரம். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள்.
விசாகம் - 4 பாதம்: வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும்.
அனுஷம்: மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும்.
கேட்டை: பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.
பரிகாரம்: தினமும் கந்த குரு கவசம் சொல்லி வணங்கி வரவும்.
***********
தனுசு கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 17ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இந்தமாதம் 17ம் தேதி - சூர்யன் பகவான் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: பஞ்சமாதிபதி விரையாதிபதி செவ்வாய் ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். தொழில் பங்குதாரர்களிடமிருந்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முனைவோர் கேட்ட இடங்களிலிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று வர நேரலாம். உடன் பணிபுரிபவர்களால் சற்று தொல்லைகள் வரலாம்.
குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்படியான சூழ்நிலை அமையும். ராசியில் சனி இருந்தாலும் பெரிய தீமைகள் ஒன்றும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. வீடு, வாகனம் போன்றவைகளில் இருந்த இழுபறி நிலை மாறும். பெண்கள் அண்டை அயலாருடன் பழகும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. கலைத்துறையினருக்கு போட்டிகள் இருந்தாலும் அதைச் சமாளித்து இலாபத்தை ஈட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் எல்லாம் இருந்த தடங்கல்கள் நீங்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்போது செய்யலாம். கடின உழைப்பின் மூலமாக நல்ல மதிப் பெண்களை பெறமுடியும்.
மூலம்: எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம்.
பூராடம்: எதிலும் சாதகமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும்.
உத்திராடம் - 1 பாதம்: எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள்.
பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வந்தால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
30 mins ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago