மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சனி(வ) - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.
1- ம் தேதி - சுக்கிர பகவான் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் பலமாக அமைந்திருக்கிறது. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் இருப்பால் சுபநிகழ்வுகள் சார்ந்த முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதூகலம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் குழப்பம் நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு சுக்கிரன் சாரத்தால் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் ரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண் கவலையை தவிர்ப்பது நல்லது. அதிக சிரத்தை எடுப்பது நன்மை தரும்.
பரிகாரம்: முருகனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.
***********
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
1- ம் தேதி - சுக்கிர பகவான் - சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சுகஸ்தான சஞ்சாரம் அனுகூலமானதாக இருக்கிறது. பணவரத்து இருக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும்.
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை சுண்டல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
***********
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
1- ம் தேதி - சுக்கிர பகவான் - தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் ராசிநாதன் புதன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களைக் குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். பெண்கள் தங்களது புத்திசாலித்தனத்தின் மூலம் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள்.
கலைத்துறையினர் அனுசரித்து போவது நன்மை தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அரசியல்வாதிகள் தாங்கள் எடுத்திருக்கும் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப். 1- 7 வரை
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago