கடகம் கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்: இந்த வாரம் பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். தொழில் வியாபாரம் சிறப்படையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.
குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். பெண்கள் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு.
உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு. ஆனாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காப்பீர்கள். பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.
» ‘கண்ட அனைத்திலும் கடவுள்’ - ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாசகத்தின் மேன்மை
» வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது பல்கலை. ஊழியர்களுக்கு திமுக செய்யும் பச்சைத் துரோகம்: சீமான்
பரிகாரம்: அம்மனை வணங்க காரியத் தடை நீங்கும்.
***********
சிம்மம் கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்: இந்த வாரம் எதிலும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத சுபச்செலவு ஏற்படலாம். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட கஷ்டம் நீங்கும்.
***********
கன்னி கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ) - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்: இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும்.
சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். பெண்கள் மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இருக்கிறது. எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது மிகுந்த நிதானமாகவும், சிக்கனமாகவும் நடந்து கொள்வது அவசியம். மாணவர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.
பரிகாரம்: குலதெய்வத்தனை வணங்க மன அமைதி கிடைக்கும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.25 - 31 வரை
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago