மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 - 29

By செய்திப்பிரிவு

மகரம் கிரகநிலை - ராசியில் சனி(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் வெளியூர் பயணங்கள் உங்களின் வெற்றிக்கு வழிகாட்டுதலாக இருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ ஒரு நற்செய்தியை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மொத்ததில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும்.

தொழிலில் தடைப்பட்டிருந்த நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய வாய்ப்புகள் சிறந்த முறையில் வந்து சேரும். வருமானமும் அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதால் புதிய முயற்சிகளை இவ்வாரம் தாராளமாக செய்யலாம். உத்தியோகத்தில் சந்தோஷமான வாரமிது. உங்களை தேடி புதிய வாய்ப்புகள் துரிதமாக வரும்.

வெளிநாடுகளில் வேலை புரிவோர் தாயகத்திற்கு திரும்புவதற்கு முயற்சி செய்தால் இப்போது அது உங்களுக்கு பலிதமாகும். அதில் பிரச்சினைகல் எதுவும் ஏற்படாது. பெண்மணிகள் கவனமாக இருக்க வேண்டிய வாரம் தான். மாமியார் மருமகள் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். மாணவ மணிகள் சிறந்த மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம். மேற்படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சியை இப்போது மேற்கொள்ளலாம்.

பரிகாரம்: வராகி அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

***********

கும்பம் கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் கல்வித் துறையில் சிறந்து விளங்குவீர்கள். சிலர் பெரிய சாதனைகளும் செய்வீர்கள். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்படியான சூழ்நிலை அமையும். ராசியில் சனி இருந்தாலும் பெரிய தீமைகள் ஒன்றும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. கணவன் மனைவிக்கிடையே நல்ல ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் இருந்த மனக்கவலை தீரும். வீடு, வாகனம் போன்றவைகளில் இருந்த இழுபறி நிலை மாறும்.

தொழில் - வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து உங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பி உங்கள் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். பண விஷயங்களை நீங்கள் உங்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று வர நேரலாம். உடன் பணிபுரிபவர்களால் சற்று தொல்லைகள் வரலாம்.அதனால் அந்த வேலையை நீங்கள் இழுத்து போட்டுக் கொண்டு செய்வீர்கள்.

பெண்கள் அண்டை அயலாருடன் பழகும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகப் பணிகளால் ஒய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். மாணவர்களுக்கு மேற்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்போது செய்யலாம். கடின உழைப்பின் மூலமாக நல்ல மதிப் பெண்களை பெறமுடியும்.

பரிகாரம்: முருகனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட குடும்ப பிரச்சனைகள் அகலும்.

***********

மீனம் கிரகநிலை - ராசியில் செவ்வாய், குரு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - சுகஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் மனதிற்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்கள் சரியான நேரத்தில் திருப்பி தராததால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். தொழில் ரீதியான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

பங்குதாரர்களிடமிருந்து மனக்கசப்பு நீங்கி தொழிலை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை செயல் படுத்துவீர்கள். தேவையான பண உதவிகள் கிடைப்பதால் செழிப்பாக தொழில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் புகழ்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம். சக ஊழியர்கள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் அதனால் கவனமுடன் பணியாற்றுங்கள். செல்வாக்கு உயரும்.

பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் மேலதிகாரிகளின் நற்பெயரைப் பெறுவீர்கள். முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். மாணவ மணிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இரவு பகல் பாராமல் படித்து வருவீர்கள். அதற்கேற்ப பலனும் கிடைக்கும்.

பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபட மனம் ஒருநிலைப்படும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 23 - 29:

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்