- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம்:
கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு - விரய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
இம்மாதம் 15ம் தேதி சூர்ய பகவான் உங்களுடைய தொழில் ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.
பலன்கள்:
» மார்ச் மாத பலன்கள்; மகர ராசி அன்பர்களே! எதிர்ப்பு அகலும்; தடைகள் நீங்கும்; பண உதவி கிடைக்கும்!
இந்த வாரம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம்போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்.
***************
கடகம்:
கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
இம்மாதம் 15ம் தேதி சூர்ய பகவான் உங்களுடைய பாக்கிய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.
பலன்கள்:
இந்த வாரம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும்போதும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். அரசியல்துறையினருக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும்.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago