- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
இந்த வாரம் எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
» மேஷம், ரிஷப ராசி அன்பர்களே! 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!
» மார்ச் மாத பலன்கள்; மீன ராசி அன்பர்களே! பண வரவு கூடும்; மனதில் மகிழ்ச்சி; வருத்தம் நீங்கும்!
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி தீபம் ஏற்றி வணங்க காரியத் தடை நீங்கும்.
*****************
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
இந்த வாரம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும்.
பரிகாரம்: காஞ்சி காமாட்சியை, அருகில் உள்ள கோயிலில் அமைந்திருக்கும் அம்பாளை பூஜித்து வணங்கி வர மனக்குழப்பம் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.
****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago