- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும். குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாகக் கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும்.
» குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்: மேஷ ராசி வாசகர்களே (13.11.2021 முதல் 13.4.2022 வரை)
» குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்: ரிஷப ராசி வாசகர்களே (13.11.2021 முதல் 13.4.2022 வரை)
வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். கலைத்துறையினருக்கு காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள்.
******************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும்.
உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அது பற்றி பரிசீலிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். அரசியல்வாதிகளுக்கு விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சினை தீரும். பொருளாதார சிக்கல்கள் அகலும்.
********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago