தனுசு, மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - பிப்ரவரி 3 முதல் 9ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடுதல் கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம்.

நீண்ட காலமாக நிலவி வந்த வெறுமை நிலை மாறும். பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
******************


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


இந்த வாரம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச் சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பெண்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். மாணவர்களுக்கு நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும்.


பரிகாரம்: சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்