மிதுனம், கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - பிப்ரவரி 3 முதல் 9ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு நீடிக்கும்.


பரிகாரம்: புதனன்று லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.


***************************


கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வேற்று மதத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கலைத்துறையினருக்கு முயற்சிகள் வெற்றிபெறும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மாறும்.


பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சினை, தொழிற்பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகும்.


**********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்