- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இந்த வாரம் ராசிநாதன் சூரியன் அனைத்து வகையிலும் நன்மை அளிக்கும் வகையில் சஞ்சரிக்கிறார். எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தைத் தரும். அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். வாகனம் மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சினைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலகப் பணியை சிறப்பாகச் செய்வார்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திக் கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்..
பரிகாரம்: குலதெய்வத்தினை வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.
***********
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.
பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சினை தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். கலைத்துறையினருக்கு செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.
பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.
*******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago
ஜோதிடம்
6 days ago