தனுசு, மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 6 முதல் 12ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)


கிரகநிலை:


ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புத (வ), சுக் (வ), சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்கள்:


உங்கள் திறமைகளை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் தனுசு ராசியினரே!


நீங்கள் எடுக்கும் காரியங்களில் குறுக்கு வழியை பின்பற்ற மாட்டீர்கள். இந்த வாரம் ராசிநாதன் எல்லா விதத்திலும் நன்மை உண்டாக்குவார். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பாக்கியஸ்தானத்தில் பஞ்சமாதிபதி செவ்வாய் சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவதால் எதிலும் வெற்றியையும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும்.


தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும்.


பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.


பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
**************


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:


ராசியில் புத (வ), சுக் (வ), சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்கள்:


உழைப்புக்கு அஞ்சாத உறுதியான மனம் கொண்ட மகர ராசியினரே!


நீங்கள் எந்தச் செயலையும் நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசியில் சஞ்சரிக்கும் கேதுவால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.


குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களைக் கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும்.


பெண்களுக்கு கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.
மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.


பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வர பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்