துலாம், விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 6 முதல் 12ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:


தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புத (வ), சுக் (வ), சனி - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்கள்:


உழைப்புக்கு ஏற்ற உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் துலா ராசியினரே!


நீங்கள் அனைவரையும் சரிசமமாக கருதுபவர். இந்த வாரம் பலவகைகளிலும் நன்மையான பலன்களை நீங்கள் பெறுவதற்கு உதவும். சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம், கவனம் தேவை.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.


எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.


பெண்களுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.


மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
*****************


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)


கிரகநிலை:


ராசியில் செவ்வாய், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புத (வ), சுக் (வ), சனி - சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு - களத்திர ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்கள்:


கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கோபப்பட்டாலும் அதை மனதில் கொள்ளாமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் விருச்சிக ராசியினரே!


இந்த வாரம் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும்.

மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதை குறைப்பது நல்லது. எந்தச் செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.


குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் -மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.


பெண்களுக்கு பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.


பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று நவக்கிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லாக் காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE