துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் சந்திரன்- பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 14.01.2025 அன்று சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும. நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழை தக்க வைக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள்.
பொருளாதாரம் தாரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும். பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு, சமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் தகுந்த புகழ் கிடைக்கும்.
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கிடும் யோகபலன்கள் உண்டாகும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.
» துலாம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025
» விருச்சிகம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.
சுவாதி: இந்த வாரம் கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் வேலைகளை செய்வது அவசியம்.
விசாகம்1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்- சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 14.01.2025 அன்று சூரியன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும். திருமணவானவர்களுக்கு புத்திர பாக்கிய அனுகூலம் உண்டு. கடன் வழக்கு எதிரி ஆகிய வகைகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் சமரச பேச்சுகளால் சுமூக நிலைக்கு வரும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஆலோசனைகள் வழங்கி குடும்பத்தை நல்ல முன்னேற்றமான நிலைக்கு கொண்டு வருவர். உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த செயல்நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரத்திற்கு புதிய வாகனம் வாங்குவீர்கள். பொதுவாக அனைத்து தொழிலதிபர்களும் நல்ல நிலைக்கு வருவர்.
பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே இருக்கும். வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும். மாணவர்களுக்கு படிப்பில் சிறப்பான பலனைக் காணலாம்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.
அனுஷம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
கேட்டை: இந்த வாரம் குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்பச் செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத்துணிவு உண்டாகும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்- தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 14.01.2025 அன்று சூரியன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளில் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும். உத்தியோகஸ்தர்கள் வருமான வரித்துறை, சுங்க இலாகா தணிக்கை துறை ஆகியவற்றில் உயர்பதவி வகிப்பவர்களுக்கு தன் துறை சார்ந்த ஊழியர்கள் ஒத்துழைப்பு குறையும்.
இதனால் இடம் மாற்றம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்குதல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி புதிய அனுபவ பாடங்களைப் பெறுவார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும். பெண்கள் முன்னேற்றம் காண்பர்.
வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும்.
மூலம்: இந்த வாரம் அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறமை கூடும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.
பூராடம்: இந்த வாரம் பிரச்சினைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன்பு அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago