கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.
கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பது நல்லது.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சககலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையாக பேசி பொழுதைக் கழிப்பீர்கள்.
பூசம்: இந்த வாரம் கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம்: இந்த வாரம் மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமான மனநிலை காணப்படும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும் வாரம். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
மகம்: இந்த வாரம் தனரீதியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பூரம்: இந்த வாரம் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் நிறுவன பங்குகள் உயரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கவுரவம் அளிப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும்.
பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்தவாரம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும். பெண்களுக்கு மன தடுமாற்றம் நீங்கும்.
கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாக போவது நல்லது. நிலம் வீடு சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
அஸ்தம்: இந்த வாரம் கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும். உங்கள் செயல்திறமை வெளிபடும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்: இந்த வாரம் அரசியல் துறையினருக்கு உங்களது வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைபடி உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago