துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரலாம். பேச்சில் துடிப்பும், ஆற்றலும் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மையாகவே இருக்கும். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் அதிக அளவில் லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும்.
புதிய வேலை தொடர்பான விஷயங்கள் நன்மையில் முடியும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் அதிகரிக்கும்.
நீண்ட நாளைய வரவுகள் வசூலாகும். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தேவைப்படும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களுக்கு தேவையான உதவிகளை எந்த தடைகளையும் தாண்டி செய்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன் இருப்பவர்களால் அவ்வப்போது பிரச்சினைகள் வரலாம்.
» துலாம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் முழுமையாக | 2024
» விருச்சிகம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் முழுமையாக | 2024
பரிகாரம்: குடும்பத்தில் நிம்மதியுடன் இருக்க தினமும் ஸ்ரீ யோக நரசிம்மரை வழிபடவும். பானகம் நிவேதனம் செய்யுங்கள்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எல்லா விதமான நற்பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் அமைதிக்கு கூடுதல் ஒத்துழைப்பு தேவை. பணவரவு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அதிகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி இருக்கும்.
திருமணம், கிரக பிரவேசம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய நபர்களால் தொல்லைகள் ஏற்படலாம். எதிலும் துணிவுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் நன்மைகள் நடக்கும். அனைவரின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.
எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் பிரச்சினைகள் எழலாம். உடன் இருப்பவர்களால் நிம்மதி குறையக் கூடிய சூழ்நிலை உருவாகும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு உடனிருப்பவர்களுடன் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களில் முழு கவனமும் இருக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றவும். நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். வர வேண்டிய பணம் தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கவனமாகவும், சாந்தமாகவும் உரையாடுவது வியாபாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எளிதான செயல்களால் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். உங்களுக்கு சொந்தமான பொருள் ஒன்றை இழக்க நேரலாம். பெண்களுக்கு மற்றவரின் விசயங்களில் தலையீடாமல் இருப்பது நன்மையைத் தரும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
அரசியல்வாதிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் செயல்பாட்டில் திருப்தி ஏற்படும். மனமகிழ்ச்சியில் நல்லபடியாக படிப்பீர்கள். கல்வியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: செந்தில் ஆண்டவரை தினமும் மனதில் துதியுங்கள். நன்மைகள் அதிக அளவில் நடக்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago