மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.12 - 18

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 17-09-2024 அன்று சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்கும்.

கலைத்துறையினர் உற்சாகமாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 17-09-2024 அன்று சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். மேலிடத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம்.

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். அரசியல்வாதிகள் மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 17-09-2024 அன்று சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் கூட மன நிறைவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி | இந்தவாரம் கிரகங்களின் நிலை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்