மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.5 - 11

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மங்கள காரியங்கள் மிக அருமையாக நடைபெறும். அவை நல்ல படியாக நடப்பதற்கு திட்டங்கள் தீட்டுவதற்கும் இந்த காலம் பேருதவியாக இருக்கும். சுபச்செலவுகள் மிக அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் நீங்கள் ஒன்று சேருவதற்கும், சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான நிகழ்ச்சிகளை திட்டமிடுவதற்கும் இந்த நேரம் உதவி புரியும். மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர்.

பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நல்ல முன்னேற்றம் காணலாம். உத்யோகஸ்தர்களுக்கு நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். மாணாக்கர்களுக்கு மேல்படிப்பு சம்பந்தமாக முடிவெடுப்பதற்க்கு இந்த காலகட்டம் மிக உதவிகரமாக இருக்கும் | பரிகாரம்: முன்னோர்களை வணங்க பணப்பிரச்சினை நீங்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் குடும்ப பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சினைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது.

சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். அரசாங்க ரீதியிலான பிரச்சினைகள் வரலாம்.

பெண்களுக்கு எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம் | பரிகாரம்: சனிபகவானை வணங்க முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் தெளிவுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும்.

குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.

எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும் | பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க வரவேண்டிய பணம் வந்து சேரும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்