கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.5 - 11

By Guest Author

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மிகச்சிறப்பாக காரியங்கள் நடக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். கவலைகள் நீங்கும். நீண்ட நாட்களாக மனதை உருத்திக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இந்த வாரம் விடை கிடைக்கும். குடும்பத்தில் சிக்கல் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள்.

வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது.

புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். தொழில் மாற்றம் உண்டாகும். பங்குதாரர் பிரச்சினைகள் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த பணியிடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பெண்களுக்கு நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் கல்வியில் சாதனை புரிவார்கள். தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது | பரிகாரம்: அம்மனை வணங்க காரிய வெற்றி உண்டு.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், சந்திரன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். சுபநிகழ்ச்சியில் இருந்த தடைகள் அகலும். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை அகலும். எந்த ஒரு காரியங்களிலும் இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும்.

உற்றார் உறவினர்கள், பெற்றோர்கள் நண்பர்கள் என அனைவரும் உங்களுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கக்கூடிய அற்புதமான காலமிது. தொழிலில் சிறு சிறு பிரச்சினைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அதை சமாளிக்கக்கூடிய திறன் உங்களுக்கு வந்து சேரும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். உத்யோகஸ்தர்களைப் பொறுத்த வரை கொடுத்த வேலையைக் கொடுத்த நேரத்தில் செய்து முடிப்பது உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் தடுக்கும். நிதானம் தேவை. வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த வந்த குழப்பங்களை சக மாணவர்கள் அல்லது ஆசிரியர் உதவியுடன் தீர்த்துக் கொள்வீர்கள் | பரிகாரம்: சிவனை வணங்க காரியங்கள் கைகூடும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் தாயார் - தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும். தொழிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வாழ்க்கை முழுவதும் பயன்படக்கூடிய அளவிற்கு ஒரு மாற்றம் இந்த வாரத்தில் ஏற்படலாம். லாபம் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

உத்யோகஸ்தர்களைப் பொறுத்த வரை இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். மேலிடம் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. மாணவர்களைப் பொறுத்தவரை புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு இந்த காலம் பேருதவியாக இருக்கும் | பரிகாரம்: பெருமாளை வணங்க மனக்கவலைகள் அகலும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்