மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.8 - 14

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: ராசிநாதன் சனி பகவான் தன ஸ்தானத்தில் இருக்கிறார். பணத்தேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.

வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளில் தடைகள் வரலாம். அரசியல்துறையினருக்கு திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.

உத்திராடம் 2,3,4 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சினைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள்.

திருவோணம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.

அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வாரம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சினை தீரும். குடும்ப குழப்பம் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: ராசிநாதன் சனி பகவான் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். மேலும் கேந்திரங்கள் பலமாக இருக்கிறது. மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வார மத்தியில் வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும். அரசியல்துறையினருக்கு கடன் சம்பந்தமான பிரச்சினைகள் அகலும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.

அவிட்டம் 3,4 பாதங்கள்: இந்த வாரம் மனத்தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.

சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.

பரிகாரம்: பெருமாளுக்கு வெண்தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: ராசிநாதன் குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் சந்திரன் சாரம் பெற்றிருக்கிறார். விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம் போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வழி வகுக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும் |அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்