மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - சுக ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 13- ம் தேதி சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் பணவரத்து சீராக இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.
தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள் அதனால் வாக்குவாம் போன்றவை உண்டாகும்.
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.
» மகரம் ராசியினருக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2024
» கும்பம் ராசியினருக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2024
உத்திராடம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சினைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலையே உண்டு. அரசாங்க பணிகள் அனைத்தும் தொய்வு இல்லாமல் நடைபெறும்.
திருவோணம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றி பெறுவீர்கள்.தொடந்து வரும் சவால்களைச் சந்தித்த பின்னரே வெற்றி கிட்டும்.
அவிட்டம்: இந்த வாரம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு ஏற்ற காலமிது. ரசனையைப் புரிந்து கொண்டு உங்கள் திறமையை காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பெண்கள் உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.
பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், சுக்கிரன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 13-ம் தேதி சூரியன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.
பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
அவிட்டம்: இந்த வாரம் மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியளிக்கும். கன்னிப் பெண்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. மூத்த சகோதரர்களிடம் விட்டு கொடுத்தல் நன்மையைத் தரும்.
சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியரிடம் பாராட்டுப் பெறுவார்கள். தனித்திறமை மேம்படும். சக மாணவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும். பொழுது போக்கிற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
பூரட்டாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தெய்வீக சிந்தனையுடன் செயல்பட வெற்றி நிச்சயம். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன், ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 13-ம் தேதி சூரியன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் தேவையற்ற மனச்சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பணத் தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும்.
பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.
பூரட்டாதி: இந்த வாரம் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். கன்னிப்பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்த்தவர்கள் அடங்குவர். தந்தையுடன் விவாதம் வரும். கவனம் தேவை. தகப்பனார் வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். சொத்துகள் சம்பந்தமாக பிரச்சினைகள் எதுவும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக மாறும்.
ரேவதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். இரவு நேரப் பயணங்களே தவிர்ப்பது நல்லது. சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago