துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 13-ம் தேதி சூரியன் சப்தம ஸ்தானத்திற்கு வருகிறார்.
பலன்கள்: இந்த வாரம் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.
» துலாம் ராசியினருக்கான ஏப்ரல் மாத பலன்கள் - முழுமையாக | 2024
» விருச்சிகம் ராசியினருக்கான ஏப்ரல் மாத பலன்கள் - முழுமையாக | 2024
சித்திரை: இந்த வாரம் அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தும் முழுமையான அளவிற்கு வெற்றி அடையும்.
சுவாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. இழுபறியாக இருந்த அரசாங்க வேலைகள் இப்போது முடிவுக்கு வரும். எதிர்பார்த்திருந்த இடத்தில் பணவரவு உண்டாகும்.
விசாகம்: இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். பணவரவு இருக்கும். உறவினரால் அதிக அனுகூலம் இருக்கும். கஷ்டங்கள் குறையும். வேலை பார்க்கும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சினை, தொழிற்பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 13-ம் தேதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு வருகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது.
வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள்.
விசாகம்: இந்த வாரம் ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். அரசாங்க வேலைகளும் அனுகூலமாக இருக்கும். சகோதரர்களுக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.
அனுஷம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. சகோதரருக்கு திருமணம் முடியும். குடும்பத்தில் சின்னசின்னப் பிரச்சினைகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்து நன்மையைப் பெறுங்கள்.
கேட்டை: இந்த வாரம் குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது பங்குதாரர் இணைவார் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 13-ம் தேதி சூரியன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.
பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.
மூலம்: இந்த வாரம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களை விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.
பூராடம்: இந்த வாரம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். புதிய மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
உத்திராடம்: இந்த வாரம் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெற் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago