கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியத்தில் இருந்து வந்த தாமதம் நீங்கி வேகம் எடுக்கும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் வேகம் பெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பந்த பாசங்கள் கூடும். உறவினர்கள் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.
மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் வரத்து நல்ல முறையில் இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் மேன்மை உண்டாகும்.
» கடகம் ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2024
» சிம்மம் ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2024
பரிகாரம்: சந்திரனை வணங்கி வர மனதெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பங்குதாரர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். கலைத்துறையினருக்கு விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும்.
மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும். தொழில் மேன்மை அடைவதற்கான வழிகளைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.
மனதில் தைரியம் உண்டாகும். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினை குறையும்.
பரிகாரம்: பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago