மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.25 - 31

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கியஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 27-01-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நோக்கங்கள் நிறைவேறும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகலாம். வீடு மனை யோகம் ஏற்படும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்: வாராகி தேவியை வணங்க உடல் ஆரோக்யம் உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 27-01-2024 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வெற்றிகளைக் குவிப்பீர்கள். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமாக சற்று கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும்.

பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு சம்பளப் பாக்கி கைக்கு வரும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்: பைரவரை வணங்க கடன் பிரச்சினை தீரும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - பஞ்சமஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 27-01-2024 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தடங்கல்கள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்வீர்கள். வீடு வாங்குவதில் இருந்த சிரமம் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.

பெண்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்: நவக்கிரக குருவை வணங்கி வருவது நன்மை தரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்