துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.14 - 20

By Guest Author

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசி ஸ்தானத்தில் சுக்கிரன் - தனவாக்கு ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது | கிரக மாற்றங்கள்: 16ம் தேதி - சூரியன் பகவான் தைர்ய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20ம் தேதி - சனி பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்தவாரம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். விரைய ஸ்தானத்தில் இருக்கும் கேதுவால் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

சித்திரை: இந்த வாரம் மருத்துவ செலவுகள் உண்டாகலாம். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

ஸ்வாதி: இந்த வாரம் எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது.

விசாகம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் சூர், செவ்வாய், புதன்(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலைகள் உள்ளது | கிரக மாற்றங்கள்: 16ம் தேதி - சூரியன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20ம் தேதி - சனி பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித் தர காத்திருக்கிருக்கிறார்கள். வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரியத் தடை தாமதம் விலகும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

விசாகம்: இந்த வாரம் மனகுழப்பம் நீங்கும். செல்வநிலை உயரும். எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும்.

அனுஷம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம்.

கேட்டை: இந்த வாரம் சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்ட பிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன்(வ) என கிரகநிலைகள் உள்ளது | கிரக மாற்றங்கள்: 16ம் தேதி - சூரியன் பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20ம் தேதி - சனி பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். பஞ்சம விரையாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி செயல்படக்கூடாது. கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

மூலம்: இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பூராடம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

உத்திராடம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்