மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.23 - 29

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், கேது - லாப ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: உங்களூக்கு இந்த வாரம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம். பெண்களுக்கு வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். கலைத்துறையினருக்கு இழுபறிநிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். அரசியல்துறையினருக்கு அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

பரிகாரம்: சனி பகவானை வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - அயன சயன் போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: உங்களூக்கு இந்த வாரம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோ தைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசி ஸ்தானத்தில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: உங்களூக்கு இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம் கவனம் தேவை.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்