கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்- சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்: 08.10.2023 அன்று மாலை 03.40க்கு ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08.10.2023 அன்று மாலை 03.40க்கு கேது பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: எதிலும் நேர்மறை எண்ணம் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அகலும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சவுக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள்.
» கடகம் ராசியினருக்கான அக்டோபர் மாத பலன்கள் முழுமையாக | 2023
» சிம்மம் ராசியினருக்கான அக்டோபர் மாத பலன்கள் முழுமையாக | 2023
பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.
பரிகாரம்: கடகம் ராசியினர் துர்க்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்- தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்: 08.10.2023 அன்று மாலை 03.40க்கு ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08.10.2023 அன்று மாலை 03.40க்கு கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: எதிலும் நேர்மையாக செயல்படும் உங்களுக்கு இந்த வாரம் அனைத்திலும் இருந்து வந்த தடைகள் அகலும். அனைத்து கிரகங்களுடைய அருமையான அமைப்பில் இருக்கிறீர்கள். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது.
குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: சிம்மம் ராசியினர் பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன்- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ), ராகு - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்: 08.10.2023 அன்று மாலை 03.40க்கு ராகு பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08.10.2023 அன்று மாலை 03.40க்கு கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: அனைவருக்கும் நன்மைகள் நினைக்கும் உங்களுக்கு இந்த வாரம் சுபவிரைய செலவுகள் வந்து சேரும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.
தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணம் வசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை.பணவரத்து தாமதப்படும்.
கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சினையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.
பரிகாரம்: கன்னி ராசியினர் பைரவரை புதன்கிழமைதோறும் வணங்க திருமண தடை நீங்கும். செல்வம் சேரும் | இந்ந வாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago