மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.14 - 20 

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு (வ), ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: வீண்செலவுகள் ஏற்படும் வாரம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனச்சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: அதிகம் உழைக்க வேண்டிய வாரம். தேவையற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபசெலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்.

பெண்களுக்கு வீண்கவலைகள் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்படும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த இறுக்க நிலை அகலும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும் வாரம். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மனமகிழ்ச்சியடைவார்கள். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகம் ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும்.

பரிகாரம்: புதன்கிழமையன்று அம்மனை வழிபடுவது நன்மை தரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்