மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.31 - செப்.6

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

பரிகாரம்: விநாயகரை வணங்க பிரச்சினைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது.

கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். அரசியல்வாதிகள் நிதானமாக பேசுவது நன்மை தரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர் கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். முதலீடுகளில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமையன்று நவகிரகத்தில் குருவிற்கு நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்