மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.24 - 30

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம், கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை அதிக சிரத்தை எடுத்து செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த காரியங்கள் முடிவிற்கு வரும்.

பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண் கவலையை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் முயற்களில் வெற்றி கிடைக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும்.

தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிணக்குகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெண்மொச்சை சுண்டல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். மேலிடத்தின் ஆதரவு அனுசரணை கிடைக்கும்.

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. நண்பர்களிடம் கவனமாக செயல்படவும்.

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாளை மரிக்கொழுந்து அர்ப்பணித்து தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த பிணக்குகள் மறையும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பரிகாரம்: பராசக்திக்கு வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன் (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

தொழில் சம்பந்தமான பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு ஆதரவான நிலை காணப்படும்.

குடும்பத்தில் திடீர் சுபச்செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது.

வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சகமாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு, ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். ஆனாலும் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை அடியோடு மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். தொழில் விஷயமாக எடுத்து வந்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்திலிருந்து இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை -ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆனாலும் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நடைபெறும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பேசும் போது கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியதாக உபதொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். மேலிடத்திலிருந்து இருந்து வந்த அழுத்தம் அகலும்.

குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.

பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மனக்குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: லட்சுமியை வெள்ளிக்கிழமையில் பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேலதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை அளிப்பீர்கள். வழக்குகளை தள்ளிப்போடாமல் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது.

பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை விவாதிக்காமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம்தேவை.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிலும் கூடுதல் சிரத்தையுடன் இருப்பது நல்லது. பணவரவு அதிகமாகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை
போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருந்தாலும் நல்லபடியாக முடியும். மேலதிகாரிகள் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். சொத்து வீடு சம்பந்தமான வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். பங்குதாரர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். மேலிடம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் இருக்கும்.

வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். பேசும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும். காரிய தடை நீங்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சகோதரர்கள் வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சினைகள் இழுபறியான நிலை காணப்படும். மனதெம்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலையைப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தமான நிலை மாறும். வரவேண்டிய பணம் கைக்கு சரியான நேரத்தில் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். போட்டிகளை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. மேலிடம் அனுகூலமாக இருக்கும்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைகண்டு மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நிலவி வந்த சுபகாரிய தடைகள் அகலும்.

பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்க குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக்கொள்வது நல்லது. முடங்கிக் கிடந்த திட்டங்களில் வேகம் பிடிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மேலிடம் உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிப்பார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பார்கள்.

குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்