மூலம், பூராடம், உத்திராடம்; இந்த வார நட்சத்திர பலன்கள்; ஜனவரி 2ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வாசகர்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


மூலம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒரு சில நெருக்கடிகள் தோன்றினாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு எளிதாக வெற்றி பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதரரால் உதவிகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் முடிவாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியை தரும். பணம் பைகளை நிரப்பும் தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்காக இருக்கும் புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். நில வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வியாபார வாய்ப்பு ஒன்று கிடைக்கும்.

புதன் -
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம், அலுவலக பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாளுங்கள்.

வியாழன் -
கடன் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சிசனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

வெள்ளி -
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள்.

சனி -
புத்தாண்டு தினமான இன்று மகிழ்ச்சிக்கு குறை இருக்காது, இந்த நாள் மட்டுமல்ல, இந்த ஆண்டு முழுவதுமே உங்களுக்கு பல வகையிலும் நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எண்ணங்கள் எளிதில் ஈடேறும்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நெருங்கிய நண்பர்கள் தொழில் ரீதியாக உதவி செய்வார்கள். பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழி கிடைக்கும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானை வணங்கி வாருங்கள். அனுமன் சாலிசா பாராயணம் செய்யுங்கள். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். நன்மைகள் பல மடங்காகப் பெருகும்.
*****


பூராடம் -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், கணவன் மனைவிக்குள் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் அகலும். பணப்பற்றாக்குறையால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் அனைத்தும் இந்த வாரம் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உறுதியாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபார ரீதியாக ஒரு முக்கியமான மனிதரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு, அவர் மூலம் வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் -
சுறுசுறுப்பாகப் பணியாற்றி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதில் தேவையில்லாத பதட்டம் இருக்கும். ஆனாலும் எந்த வேலைகளிலும் தொய்வு இருக்காது. வியாபார ரீதியாகவும் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல்-வாங்கல் அறவே கூடாது. வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
அலுவலகப் பணிச் சுமை கூடும். கடுமையாக உழைத்து வேலைகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி -
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும். வெளிநாடு வாழ் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு ஏற்படும் நாள்.

சனி -
புத்தாண்டு தினமான இன்றும் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும் விஷயங்கள் நடக்கும், இந்த நாள் மட்டுமல்ல இந்தப் புத்தாண்டின் ஆண்டு முழுவதும் உங்களுக்கு பல வகையிலும் அதிகப்படியான நன்மைகள் நடக்க கூடிய ஆண்டாக இருக்கும்.

ஞாயிறு -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். புத்தி கூர்மை அவசியம், எந்த ஒரு செயலையும் நன்கு சிந்தித்து ஆலோசனை பெற்று செயல்படுத்த வேண்டிய நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
துர்கை வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீதுர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். நன்மைகள் கிடைக்கும்.

*******************

உத்திராடம் -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், கணவன் மனைவிக்குள் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் அகலும். பணப்பற்றாக்குறையால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் அனைத்தும் இந்த வாரம் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உறுதியாகும்.

இந்த வாரம் -
திங்கள் -
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து தீர்வு எட்டப்படும். எதிர்பார்த்த பண வரவு உண்டு. குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டியதிருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். முக்கியத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாக பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த ஒரு சில குறைகளையும் இன்று சரி செய்து விடுவீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும்படியாக ஏற்றம் இருக்கும். தரகுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும். சுப காரிய பேச்சுகள் மனதிற்கு நிறைவைத் தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். வியாபார விஷயமாக நீங்கள் சந்திக்க நினைத்திருந்த நபரை சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.

சனி-
புத்தாண்டு தினமான இன்று மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும், நல்ல வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு வாங்குதல் போன்ற நல்ல சிந்தனைகள் ஏற்படும். அது இந்த ஆண்டு முடிவதற்குள் நிச்சயம் நிறைவேறும்.

ஞாயிறு -
அமைதியாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவவழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்